Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வலுவிழந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடுத்து என்ன? பிரதீப் ஜான் சொன்ன முக்கிய தகவல்..

Northeast Monsoon: வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவிழந்ததன் காரணமாக, வரவிருக்கும் நாட்களில் தமிழகத்தில் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 23, 2025 தேதியான இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டையில் சில இடங்களில் மட்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வலுவிழந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடுத்து என்ன? பிரதீப் ஜான் சொன்ன முக்கிய தகவல்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 23 Oct 2025 12:18 PM IST

சென்னை, அக்டோபர் 23, 2025: வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி தற்போது வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதலில் இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டது. ஆனால் தற்போது அது வலுவிழந்து, வட உள் தமிழ்நாடு மற்றும் அருகிலுள்ள தென் உள் கர்நாடகப் பகுதிகளில் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் மேலும் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கக் கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

அரக்கோணத்தில் பதிவான 13 செ.மீ மழை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16, 2025 அன்று தொடங்கியது. பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்தும் ஹரூர் (தருமபுரி மாவட்டம்) 11, மோகனூர் (நாமக்கல் மாவட்டம்), நாமக்கல் (நாமக்கல் மாவட்டம்), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்), வெள்ளக்கோவில் (திருப்பூர் மாவட்டம்) தலா 9, திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம்), ஆர்எஸ்சிஎல்-3 அவலூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம்), கிளென்மார்கன் (நீலகிரி மாவட்டம்) தலா 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க: ரயில் பணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 4வது வழித்தடம்.. ரூ. 757 கோடி மதிப்பில் திட்ட ஒப்புதல்..

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – பிரதீப் ஜான்:


இதற்கிடையில், வரவிருக்கும் நாட்களில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி வங்கக் கடலில் உருவாகி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் (X) வலைதளப் பதிவில் அவர், “அக்டோபர் 23, 2025 தேதியான இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும். மேற்கு நீலகிரி பகுதிகளான பந்தலூர், அவலாஞ்சி உள்ளிட்ட இடங்களிலும் நல்ல மழை பதிவாகும்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் மழை பதிவாகி வந்தது. ஆனால் தற்போது காற்றின் திசை மாறுதல் காரணமாக, மாலை அல்லது இரவு நேரங்களில் மேற்கு பகுதிகளில் நல்ல மழை பெய்யக்கூடும்,” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: பெரும் கடன்.. மனைவி, மகன்கள் கொலை.. தொழிலதிபர் தற்கொலை

சென்னைக்கு கனமழை எச்சரிக்கை:

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவிழந்ததன் காரணமாக, வரவிருக்கும் நாட்களில் தமிழகத்தில் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், அக்டோபர் 23, 2025 தேதியான இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் சில இடங்களில் மட்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.