Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரயில் பணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 4வது வழித்தடம்.. ரூ. 757 கோடி மதிப்பில் திட்ட ஒப்புதல்..

Chennai - Chengalpattu Rail: தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே 4வது ரயில் பாதையை (30.02 கி.மீ) அமைக்கும் பணிக்கு ரயில்வே அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் தற்போதைய செலவு ரூ.713.56 கோடி மற்றும் நிறைவு செலவு ரூ.757.18 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

ரயில் பணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 4வது வழித்தடம்.. ரூ. 757 கோடி மதிப்பில் திட்ட ஒப்புதல்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 23 Oct 2025 07:42 AM IST

சென்னை, அக்டோபர் 23, 2025: புறநகர் ரயில் பயணிகளுக்கான மிக முக்கிய அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே நான்காவது ரயில் தடம் அமைக்கும் திட்டத்திற்கு மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 30.2 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த திட்டம் ரூ. 757.18 கோடி மதிப்பில் உருவாக்கப்படுகிறது. சென்னையைப் பொறுத்தவரையில், கடற்கரை முதல் தாம்பரம் வரையிலும், கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலும் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதைத் தவிர, வேளச்சேரி முதல் கடற்கரை வரை பறக்கும் முறையிலும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த ரயில் சேவைகள் மூலம் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். குறிப்பாக அலுவலகம் செல்லும் மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என பலரும் இந்த புறநகர் ரயில் சேவையை நம்பியே இருக்கின்றனர். தற்போது இரண்டு புறநகர் சேவைகளுக்கும், ஒன்று விரைவு மற்றும் சரக்கு ரயில் சேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த மூன்று தடங்கள் போதாமல் உள்ளன. மக்களின் வசதிக்காக நான்காவது வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:  தலை தீபாவளி முடிந்து வேலைக்கு சென்ற கணவன்.. மனைவி தற்கொலை

தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 4வது வழித்தடம்:

தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை நான்காவது வழித்தடம் தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், மறைமுகநகர் வழியாக புதிய பாதை அமைக்கப்படும். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே 4வது ரயில் பாதையை (30.02 கி.மீ) அமைக்கும் பணிக்கு ரயில்வே அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் தற்போதைய செலவு ரூ.713.56 கோடி மற்றும் நிறைவு செலவு ரூ.757.18 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

தாம்பரம் – செங்கல்பட்டு பிரிவு தற்போது சென்னை கடற்கரை – விழுப்புரம் – திருச்சிராப்பள்ளி – கன்னியாகுமரி பிரதான பாதையில் மூன்று வழித்தடங்களாக உள்ளது. இது புறநகர் மற்றும் நீண்ட தூர விரைவு ரயில்களுக்கு சேவை செய்கிறது. புறநகர், மெயில்/எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு போக்குவரத்தை அதிக அளவில் கொண்டுசெல்லும் இந்தப் பிரிவு அடிக்கடி நெரிசலை சந்திக்கிறது. இதனால் நேரம் பின்தங்குதல் மற்றும் திறன் விரிவாக்கம் பாதிக்கப்படுகிறது.

மேலும் படிக்க: பெரும் கடன்.. மனைவி, மகன்கள் கொலை.. தொழிலதிபர் தற்கொலை

நெரிசலை குறைப்பதே நோக்கம்:

தற்போது இந்தப் பிரிவின் பாதை திறன் பயன்பாடு சுமார் 87% ஆக உள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாவிட்டால் அது 136% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்மொழியப்பட்ட நான்காவது பாதை நெரிசலைக் குறைக்கும், செங்கல்பட்டு வரை பிரத்யேக புறநகர் ரயில் பாதையை நீட்டிக்க உதவும், மேலும் சாலைப் போக்குவரத்திலிருந்து ரயில்பாதைக்கு மாறுவதை ஊக்குவிக்கும். இது பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்கும் பயனளிக்கும்.

தாம்பரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் அதிகரித்து வரும் புறநகர் போக்குவரத்து மற்றும் பெரிய அளவிலான குடியிருப்பு, தொழில்துறை வளர்ச்சியுடன், தாம்பரம் – செங்கல்பட்டு நான்காவது பாதை தினசரி பயணிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

ரூ. 157 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் :

இந்த திட்டம் தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு பெரிதும் பயனளிக்கும். இது நெரிசலைக் குறைக்கும் மற்றும் வரவிருக்கும் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மற்றும் புதிய கிளாம்பாக்கம் பேருந்து முனையம் இடையேயான புறநகர் ரயில் இணைப்பை மேம்படுத்தும்.

இந்தத் திட்டம் ஆண்டுக்கு 1.344 மில்லியன் டன் கூடுதல் சரக்கு போக்குவரத்தை உருவாக்கும் என்றும், இதன் விளைவாக ஓரகடம், படப்பை மற்றும் காஞ்சிபுரம் இடையேயான பல தொழில்துறை அலகுகள் மற்றும் சிப்காட்களை உள்ளடக்கியதால் செயல்பாட்டுக்கு வந்த பிறகு ரூ. 157 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.