படிப்படியாக குறையும் வெப்பநிலை.. இனி மழை மட்டும் தான்.. 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..
Tamil Nadu Rain Alert: அடுத்த வரும் ஏழு நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரக்கூடிய நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை குறைய கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
வானிலை நிலவரம், அக்டோபர் 13, 2025: தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 13 அக்டோபர் 2025 (இன்று) கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 14 அக்டோபர் 2025 (நாளை) கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த 7 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை:
15 அக்டோபர் 2025 அன்று நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 16 அக்டோபர் 2025 அன்று கோவை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இன்று முதல் கவுன்ட் டவுன் தொடங்குகிறது.. கெடு வைத்த நயினார் நாகேந்திரன்!
17 அக்டோபர் 2025 அன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும், 18 அக்டோபர் 2025 அன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
படிப்படியாக குறையும் வெப்பநிலை:
அடுத்த வரும் ஏழு நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரக்கூடிய நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை குறைய கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: எனது கூட்டத்தில் தவெகவினரே விருப்பப்பட்டு வரவேற்பு கொடுக்கின்றனர் – ஈபிஎஸ்!
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை மதுரையில் 35°C பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து வேலூரில் 34°C, பாளையங்கோட்டையில் 34°C, திருச்சியில் 33.3°C, ஈரோட்டில் 34.4°C, குமரியில் 34.8°C, கரூரில் 33.5°C வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னை பொறுத்தவரையில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 32.2°C மற்றும் மீனம்பாக்கத்தில் 31.4°C வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. வரக்கூடிய நாட்களில் இந்த வெப்பநிலை மேலும் குறைய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.