தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை.. முழு ரிப்போர்ட் இதோ..
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், வெப்பநிலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, நவம்பர் 3 மற்றும் 4 ஆகிய இரண்டு நாட்களில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை மூன்று முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக வானிலை நிலவரம் — நவம்பர் 3, 2025: நவம்பர் 2, 2025 தேதியான நேற்று மாலை, வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நவம்பர் 3, 2025 இன்று காலை அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, மியான்மர்–பங்களாதேஷ் கடற்கரை ஓரமாக நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், நவம்பர் 2, 2025 தேதியான நேற்று வடகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நவம்பர் 3, 2025 இன்று காலை வலுவிழந்தது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று மற்றும் நாளை (நவம்பர் 3 மற்றும் 4, 2025) இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பதிவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு:
நவம்பர் 5, 2025 தேதியான நாளை, வட தமிழகத்தின் சில இடங்களிலும் தென் தமிழகத்தின் சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலை நவம்பர் 9, 2025 வரை தொடரக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அரசியல் பொதுக்கூட்ட விதிமுறை: நவ.6ல் அனைத்துக் கட்சி கூட்டம்!!
அதிகரிக்கும் வெப்பநிலை:
தமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், வெப்பநிலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, நவம்பர் 3 மற்றும் 4 ஆகிய இரண்டு நாட்களில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை மூன்று முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் பகல் நேரங்களில் ஊட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழையின் அளவு குறைந்துள்ள நிலையில், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: “அதிமுகவிலும் குடும்ப அரசியல்”.. இபிஎஸ் குறித்த செங்கோட்டையன் சொன்ன பகீர் தகவல்!!
தமிழக வெப்பநிலை விவரம் (கடந்த 24 மணி நேரம்):
- மதுரை – 37.4°செ. (அதிகபட்சம்)
- வேலூர் – 35.4°செ.
- திருச்சி – 35°செ.
- தஞ்சாவூர் – 35°செ.
- ஈரோடு – 36.8°செ.
- சென்னை நுங்கம்பாக்கம் – 35.4°செ.
- மீனம்பாக்கம் – 34.9°செ.