தமிழத்தில் இனி மழை இல்லை.. வறண்ட வானிலை தான்.. அதிகரிக்கும் பகல் நேர வெப்பநிலை..
Tamil Nadu Weather Update: ஜனவரி 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு இல்லை என்றும், வறண்ட வானிலையே நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது எனவும், பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் வெப்பநிலை கணிசமாக குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
வானிலை நிலவரம், ஜனவரி 27, 2026: தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 27 ஜனவரி 2026 தேதியான இன்று, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்யக்கூடும் எனவும், இதர தமிழக பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், அரியலூர், கள்ளக்குறிச்சி, தேனி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பதிவாகி வந்தது.
நெல்லையில் பதிவான 5 செ.மீ மழை:
அதாவது, குமரிக்கடல் முதல் வடக்கு கேரள பகுதிகள் வரை நிலவிய கிழக்கு காற்று அலை காரணமாக பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், வரக்கூடிய நாட்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பு கணித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், ஊத்து (திருநெல்வேலி) 5, நாலுமுக்கு (திருநெல்வேலி), காக்காச்சி (திருநெல்வேலி) தலா 4, மாஞ்சோலை (திருநெல்வேலி), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), குன்னூர் PTO (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி), குன்னூர் AWS (நீலகிரி) தலா 3, கின்னக்கோரை (நீலகிரி), திருத்தணி PTO (திருவள்ளூர்), அழகரை எஸ்டேட் (நீலகிரி), குன்னூர் (நீலகிரி), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), குந்தா பாலம் (நீலகிரி), கோடநாடு (நீலகிரி), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), சத்தியமங்கலம் (ஈரோடு), அரக்கோணம் (ராணிப்பேட்டை), குடியாத்தம் (வேலூர்) தலா 2 செ.மீ மழை பதிவானது.
மேலும் படிக்க: திமுக ஆட்சியில் பெண்கள் சுதந்திரத்துக்கு உரிய கட்டமைப்பு வழங்கப்படும்…முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!
தமிழகத்தில் இனி மழை இல்லை:
இந்த சூழலில், ஜனவரி 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு இல்லை என்றும், வறண்ட வானிலையே நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது எனவும், பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் வெப்பநிலை கணிசமாக குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அமமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ஆதரவாளர் அய்யப்பன்?டிடிவி தினகரனுடன் திடீர் சந்திப்பு…பின்னணி என்ன!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், பகல் நேரங்களில் வானம் அவ்வப்போது ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், வெயிலின் தாக்கம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும் என தெரிவித்தார்.