நீலகிரியை விடாமல் துரத்தும் மழை.. மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை.. சென்னையில் எப்படி?

Weather Update: நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 14 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து ஜூன் 15,2025 தேதியான இன்றும் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை, திருப்பூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரியை விடாமல் துரத்தும் மழை.. மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை.. சென்னையில் எப்படி?

கோப்பு புகைப்படம்

Published: 

15 Jun 2025 14:23 PM

 IST

வானிலை நிலவரம், ஜூன் 15,2025: தென்மேற்கு பருவமழை தொடங்கிய முதல் நீலகிரி, கோவை, தென்காசி கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பதிவாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 16 சென்டிமீட்டர் மழை அதிகபட்சமாக பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் பந்தலூர், கோவை மாவட்டம் சின்கோனா, வால்பாறை உள்ளிட்ட இடங்களில் எட்டு சென்டிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. சென்னையில் நேற்று பிற்பகலில் நகரின் ஒரு சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இரவு நேரத்தில் சென்னை மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் ,மீனம்பாக்கம், ஆலந்தூர், கிண்டி, பரங்கிமலை, சின்னமலை உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் லேசான முதல் மிதமான மழை பதிவானது.

நீலகிரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை:


இது ஒரு பக்கம் இருக்க மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஜூன் 15 2025 தேதியான இன்று நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் அதி கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 16 2025 தேதி ஆன நாளை நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவ மழை தொடங்கியது முதலில் நீலகிரியில் அதிக அளவு மழை கொட்டி வருகிறது. ஜூன் 18-ஆம் தேதி வரை நீலகிரியில் கனமழை பதிவாகும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரையில் ஜூன் 15 2025 தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை நேரங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மே மற்றும் ஜூன் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். ஆனால் இந்த ஆண்டு மே மாதமே அதாவது முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழை தொடங்கியதன் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து நகரின் அனேக இடங்களில் நல்ல மழை பதிவாகி வருகிறது.

Follow Us
Related Stories
செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் திருட்டு.. நாகர்கோவில் தபால் நிலையத்தில் அதிகாரிகள் அதிரடி ரெய்டு.. சிக்கும் ஊழியர்கள்!
சிறுமி பாலியல் வழக்கு.. குற்றவாளிக்கு 16 ஆண்டுகள் சிறை.. 9 ஆண்டுகளுக்கு பின் நீதி.. போக்ஸோ நீதிமன்றம் அதிரடி!
இரவில் நண்பர்களுடன் மது விருந்து.. காலையில் ரத்த வெள்ளத்தில் கொலை.. காஞ்சிபுரத்தில் நடுங்க வைக்கும் சம்பவம்!
வாக்குப்பதிவு நாளில் பேருந்துகள் நிறுத்தம் திட்டமிட்ட சதி.. தவெக நிர்மல் குமார் பகிரங்க குற்றச்சாட்டு!
தவெக உத்தேச அமைச்சரவை பட்டியல்.. விஜய்யின் பிளான் லீக்கானதா? சமூகவலைதளங்களில் வைரலாகும் போஸ்ட்!
2 மணி நேரம் கேமரா இணைப்பு கட்.. பின்னோக்கி சென்ற வீடியோ காட்சிகள்.. வாக்குப்பதிவு இயந்திர அறையில் பரபரப்பு!
அதிகரிக்கும் ஈரபதத்துடன் கூடிய வெப்ப அலை - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
இந்த ரயில் நிலையம் செல்ல பாஸ்போர்ட் கட்டாயம்.. எங்கு தெரியுமா?
ஆதார் எண் இருந்தால் மட்டும் வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியுமா?
தொழிலதிபரின் வீட்டில் கொள்ளையடித்த 5 போலீஸ் அதிகாரிகள்