சென்னை மக்களே ரெடியா? ஜூன் 3 முதல் மின்சார பேருந்து சேவை.. எந்தெந்த ரூட்ல தெரியுமா?

Chennai Electric Buses : சென்னையில் மின்சார பேருந்து சேவை 2025 ஜூன் 3ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. கருணாநிதி பிறந்தநாளையொட்டி, மின்சார பேருந்து சேவை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். சென்னையில் பெரும்பாக்கம், சென்ட்ரல், வியாசர்பாடி, பூந்தமல்லி உள்ளிட்ட ஐந்து பேருந்து நிலையங்களில் இருந்து மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னை மக்களே ரெடியா? ஜூன் 3 முதல் மின்சார பேருந்து சேவை.. எந்தெந்த ரூட்ல தெரியுமா?

சென்னையில் மின்சார பேருந்துகள்

Updated On: 

31 May 2025 08:16 AM

 IST

சென்னை, மே 31 : சென்னையில் 2025  ஜூன் 3ஆம் தேதி முதல் மின்சார  பேருந்து சேவைகள் (chennai electric buses) இயக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.  மறைந்த முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் (mk stalin)  2025 ஜூன் 3ஆம் தேதி  மின்சார பேருந்து சேவை தொடங்கி வைக்க உள்ளார். சென்னையில்  மாநகர பேருந்து சேவை  முக்கியத்துவம் வாய்ந்தது. புறநகர்ளுக்கு செல்லுக் கூடியது என்பதால், பயணிகள் பெரும்பாலானோர் பேருந்துகளில் பயணித்து வருகின்றனர்.   அனைத்து இடங்களில் சுலபமாக செல்லக் கூடிய வகையில், மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.   மாநகர பேருந்துகளில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர்.  பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலை செல்பவர்கள் என தினமும் பயணித்து வருகின்றனர்.  மாநகர பேருந்து சேவையை நவீனப்படுத்தும் முயற்சியில் தமிழக போக்குவரத்து கழகமும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

ஜூன் 3 முதல் மின்சார பேருந்து சேவை

அண்மையில் கூட, தாழ்தள பேருந்து சேவையை போக்குவரத்து கழகம் தொடங்கியது. இது பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்ந நிலையில், சென்னை மின்சார பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிடப்பட்டது.

இதற்கான ஒப்பந்தமும் அசோக் லைலாண்டு மற்றும் துணை நிறுவனமான ஓஎச்எம் குளோபல் மொபிலிடி நிறுவனத்தடன் போடப்பட்டது.  பேருந்துகளை தயாரிக்கும் பயணிகளும் தீவிரமாக நடந்தது. தற்போது அனைத்து முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வர உள்ளது.

அதாவது, 2025 ஜூன் 3ஆம் தேதி சென்னையில் மின்சார பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளது. கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் 2025 ஜூன் 3ஆம் தேதி மின்சார பேருந்து சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.

ரெடியான மின்சார பேருந்துகள்


முன்னதாக, 2025 மே 30ஆம் தேதியான நேந்று விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ள மின்சார பேருந்துகளை மாநகர போக்குவரத்து கழக இயக்குநர் பிரபுசீன் ஆய்வு மேற்கொண்டார். சென்னை வியாசர்பாடி பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த மின்சார பேருந்துகளை ஆய்வு செய்தார். அப்போது, அவருடன் மாநகர போககுவரத்து கழக இணை மேலாண்மை இயக்குநர் மற்றும் பிற அதிகாரிகளும் இருந்தனர்.

எந்தெந்த வழித்தடங்களில்?

சென்னையில் மொத்தம் 625 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை சென்ட்ரல் பேருந்து நிலையத்தில் இருந்து 145 பேருந்துகளும், பூந்தமல்லியில் 125 பேருந்துகளும், வியாசர்பாடியில் 120 பேருந்துகளும், பெரும்பாக்கத்தில் 120 பேருந்துகளும், தொண்டியார்பேட்டையில் 100 பேருந்துகளும் என மொத்தம் 625 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த ஐந்து பேருந்து நிலையங்களில் இருந்து மின்சார பேருந்து இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த ஐந்து பேருந்து  நிலையங்களில் அதற்கான சார்ஜிங் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பலத்த காற்றால் சாய்ந்த சுதந்திர தேவி சிலை - பிரேசிலில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்
கைலாச மலை – யாரும் ஏற முடியாத தீராத மர்மம்
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பயோபிக்கில் நடிக்கும் சாய் பல்லவி?
ஜிம்மில் பயிற்சி செய்தபோது திடீரென பார்வை இழந்த 27 வயது இளைஞர்