2 மணி நேரம் மிச்சம்… சென்னை டூ நாகைக்கு ஈஸியா போகலாம்.. குஷியில் டெல்டா மக்கள்

Chennai Nagapattinam Highway : சென்னை கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிகள் முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம், கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடலூர், சிதம்பரம், சீர்காழி மற்றும் நாகப்பட்டினம் நோக்கி பயணிக்கும் நேரம் வெகுமாக குறையக் கூடும்.

2 மணி நேரம் மிச்சம்... சென்னை டூ நாகைக்கு ஈஸியா போகலாம்.. குஷியில் டெல்டா மக்கள்

மாதிரிப்படம்

Updated On: 

12 Oct 2025 10:49 AM

 IST

சென்னை, அக்டோபர் 12 : சென்னை கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிகள் முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம், கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடலூர், சிதம்பரம், சீர்காழி மற்றும் நாகப்பட்டினம் நோக்கி பயணிக்கும் நேரம் வெகுமாக குறையக் கூடும். குறிப்பாக, நாகப்பட்டினத்திற்கு சென்னை கிழக்கு கடற்கரை சாலை வழியாக இரண்டு மணி நேரத்தை சேமிக்க முடியும். நாடு முழுவதும் சாலை போக்குவரத்தை மேம்படுத்த மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக மக்களிடையே சீரான போக்குவரத்தை ஏற்படுத்த நெடுஞ்சாலைகளை மத்திய அரசு விரிவுபடுத்தியும் வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் சாலைகளை விரிவாக்கம் செய்வதில் மத்திய அரசு மும்முரம் காட்டி வருகிறது.

அப்படி சென்னை கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிகள் முடியும் கட்டத்தில் உள்ளது. பாரத் மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1,588 கோடியில் சாலை விரிவாக்கம் பணிகள் நடந்து வருகிறது. 38 கி.மீ நீளமுள்ள புதுச்சேரிபூண்டியன்குப்பம் பாதையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணியை முடித்துள்ளது. இதனால், சென்னைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையிலான பயண நேரம் காரில் 7 மணி நேரத்தில் இருந்து. 5 மணி நேரமாகும், பேருந்தில் 9 மணி நேரத்தில் இருந்து 7 மணி நேரமாகவும் குறையக் கூடும். புதுச்சேரிபூண்டியான்குப்பம் இடையேயான பணிகள் முடிவடைந்ததால், திருவான்மியூர் தொடங்கி நாகப்பட்டினம் வரையிலான 300 கி.மீ கிழக்கு கடற்கரை சாலையில் 220 கி.மீ தூரத்திற்கான சாலைகள் நான்கு வழி சாலைகளாக அகலப்படுத்தப்பட்டுள்ளன.

Also Read : 5,000 ரூபாயா? தீபாவளிக்கு 3 மடங்காக உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம் – பேரதிர்ச்சியில் மக்கள்

சென்னை டூ நாகைக்கு ஈஸியா போகலாம்

இது டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களுக்கான சாலை இணைப்பை கணிசமாக மேம்படுத்தியுள்ளது. தற்போது முடிவுற்ற புதுச்சேரிபூண்டியான்குப்பம் கிழக்கு கடற்கரை சாலை பிரிவை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி அக்டோபர் 13 ஆம் தேதி நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

Also Read : அதிகாலையில் நடந்த கொடூரம் – ஒன்றன்பின் ஒன்றாக மோதிய வாகனங்கள்… சம்பவ இடத்திலேயே 4 பேர் பலி

300 கிமீ தூரத்திற்கு கிழக்கு கடற்கரை சாலையை அகலப்படுத்தும் திட்டத்தின் பகுதியாக 46 கி.மீ மரக்காணம்புதுச்சேரி பாதையின் வழிச்சாலைப் பணிக்கும் அவர் அடிக்கல் நாட்டுவார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், கிழக்கு கடற்கரை சாலை வழியாக நாகப்பட்டினம் செல்வதற்கு இரண்டு மணி நேரம் மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us
Related Stories
மத்திய அரசுப் பணியிடங்களுக்கான பிரம்மாண்ட அறிவிப்பு… யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
விண்ணை தொடும் விமான கட்டணம்.. ராக்கெட் வேகத்தில் எகிறிய டிக்கெட் விலை.. சென்னைக்கு எவ்வளவு தெரியுமா?
முதல்வர் மு.க.ஸ்டாலின் – துணை முதல்வர் உதயநிதி இன்ப சுற்றுலா.. தமிழிசை செளந்தரராஜன் விளாசல்!
சித்திரை திருவிழா.. “ஓம் நமச்சிவாய” கோஷத்துடன் அசைந்து வந்த தஞ்சாவூர் பெரிய கோவில் தேர்!
கோடை வெயிலுக்கு டப் கொடுக்கும் இயற்கை ஏசி ஆட்டோ.. வியர்க்காத பயணம்… வித்யாசமான அனுபவம்.. சேலத்தில் வினோதம்!
சித்திரை திருவிழா.. மதுரையில் போக்குவரத்து மாற்றம்.. வாகன ஓட்டிகளுக்கு புதிய நடைமுறை!
சிஇடி தேர்வு எழுத வந்த மாணவிகளின் மூக்குத்தியை அகற்ற சொன்னதால் பரபரப்பு
ஈரானில் அரசியல் அமைப்பில் திடீர் மாற்றங்கள் - என்ன காரணம்?
வெள்ளி விலை சரிவு, தங்கம் மற்றும் எண்ணெய் விலை உயர்வு
அதிக காய்கறி பழங்கள் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயமா? புதிய ஆய்வு சொல்வது என்ன?