Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வட சென்னையில் வெளுக்கப்போகும் கனமழை.. வெதர்மேன் சொன்ன முக்கிய அலர்ட்!

North Chennai Heavy Rain | வங்கக்கடலில் மோன்தா புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில், தமிழகத்திற்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என கூறப்பட்டுள்ள நிலையில், வட சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

வட சென்னையில் வெளுக்கப்போகும் கனமழை.. வெதர்மேன் சொன்ன முக்கிய அலர்ட்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Oct 2025 10:57 AM IST

சென்னை, அக்டோபர் 27 : வங்க கடலில் (Bay of Bengal) உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மோன்தா புயலாக (Montha Cyclone) உருவாகியுள்ளது. இந்த புயல் அதிதீவிர புயலாக மாறி நாளை (அக்டோபர் 27, 2025) கரையை கடக்க உள்ளது. இந்த புயலால் தமிழகத்திற்கு பெரிய ஆபத்து இல்லை என கூறப்பட்டு இருந்தாலும், வட சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வெதர்மேன் தெரிவித்துள்ளார். தென் சென்னையை விடவும் வட சென்னையில் மழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், சென்னை மழை நிலவரம் குறித்து வெதர்மேன் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள மோன்தா புயல்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மையம் புலயாக உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு மோன்தா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் சென்னையில் இருந்து கிழக்கு – தென்கிழக்கு பகுதியில் 600 கிலோமீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ளது. இந்த நிலையில், இந்த புயல் சுமார் 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் எனவும் கூறப்பட்டுள்ளது. நாளை (அக்டோபர் 28, 2025) ஆந்திர மாநில கடற்கரை பகுதியில் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது தமிழகத்திற்கு பெரியதாக பாதிப்பு இருக்காது என கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : நாளை வெளியாகும் தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் – செய்தியாளர்களை சந்திக்கும் தேர்தல் ஆணையம்

வட சென்னையில் மழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும் – வெதர்மேன்

சென்னை மழை நிலவரம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வெதர்மேன், அதில் தென் சென்னையை விடவும் வட சென்னையில் 50 முதல் 70 மில்லி மீட்டர் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். தென் சென்னை பகுதிகளில் 30 முதல் 50 மில்லி மீட்டர் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த மோன்தா புயல் சென்னைக்கு பெரிய பாதிப்பாக இருக்காது என்றும் தென் சென்னையை விடவும் வட சென்னை சற்று அதிக மழையை எதிர்க்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.