சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு இதோ!

Boat Training at Madras Boat Club: சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் படகு பயிற்சி பெறும் வாய்ப்பு பெற்றுள்ளனர். இது முழுமையாக இலவசமாக வழங்கப்படுகிறது. புதிய திறமைகளை வளர்க்கும் இந்த முயற்சி மாணவர்களுக்கு எதிர்கால நன்மைகளை தரும். பயிற்சி முடித்த மாணவர்களுக்கு விளையாட்டு ஒதுக்கீடு வாய்ப்பு உள்ளது.

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு இதோ!

மெட்ராஸ் படகு குழாம்

Updated On: 

19 Jul 2025 09:01 AM

சென்னை ஜூலை 19: சென்னை மாநகராட்சி (Chennai Corporation) பள்ளி மாணவர்கள் மெட்ராஸ் படகு குழாமில் (Madras boat Club) ஒரு வருட படகு பயிற்சியில் பங்கேற்கின்றனர். 13–16 வயதினருக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், நீச்சல் அறிவும் 5 அடி உயரமும் கட்டாயமாகும். பயிற்சி, உபகரணங்கள், போக்குவரத்து, உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. மாணவர்கள் உடல் வலிமை சோதனைகள் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். முதற்கட்டமாக கோட்டூர்புரம், தரமணி, திருவான்மியூர் (Kotturpuram, Taramani, Thiruvanmiyur) பள்ளிகளில் இருந்து மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பயிற்சி முடித்த மாணவர்களுக்கு விளையாட்டு ஒதுக்கீடு வாய்ப்பு உள்ளது.

ஒரு வருட கால படகு பயிற்சி திட்டம்

சென்னை பெருநகர மாநகராட்சி (GCC) பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விளையாட்டு மற்றும் உடல் திறமைகளை வளர்க்கும் விதமாக, மெட்ராஸ் படகு குழாமில் (Madras Boat Club – MBC) ஒரு வருட கால படகு பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு, கொரோனா காரணமாக இடைநிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் புதிய ஆக்கப்பூர்வ முயற்சியாக செயல்படத் தொடங்கியுள்ளது.

நீச்சல் தெரிந்த மாணவர்கள் தேர்ந்தெடுப்பு

இந்த பயிற்சிக்காக 13 முதல் 16 வயதுக்குள் இருக்கும், குறைந்தபட்சம் 5 அடி உயரம் கொண்ட, நீச்சல் தெரிந்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பயிற்சி, உபகரணங்கள், போக்குவரத்து, மற்றும் சத்தான உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் உடல் வலிமையை பரிசோதிக்க எர்கோமீட்டர் சோதனையில் பங்கேற்கின்றனர். அவசர தேவைக்காக இரண்டு நிபுணர்கள் துவாராக இருக்கின்றனர். பயிற்சி பெறும் மாணவர்கள் உயிர் காக்கும் ஆடைகளை அணிவது கட்டாயமாகும்.

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு

பயிற்சி பெறும் பள்ளிகள் மெட்ராஸ் படகு குழாமிலிருந்து 5 கி.மீ சுற்றளவில் உள்ளன. தற்போது கோட்டூர்புரம், தரமணி, திருவான்மியூர், ஆழ்வார்பேட்டை, நந்தனம் போன்ற பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இந்த பயிற்சி வரும் 2025 ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்குகிறது. பயிற்சி முடிந்த பின்னர், மாணவர்கள் மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுவார்கள்.

Also Read: தூத்துக்குடியில் பனிமய மாதா பேராலய 443வது திருவிழா: முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்

உதவித்தொகை பெறும் வாய்ப்பு ஏற்படும்

இந்த பயிற்சி மாணவர்களின் தன்னம்பிக்கையை உயர்த்தி, குழுவாக செயல்படும் திறனை வளர்க்கும். உடல் நலத்தையும், மன அமைதியையும் மேம்படுத்தும். மேலும், விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் கல்லூரிகளில் உதவித்தொகை பெறும் வாய்ப்பு ஏற்படும். கல்வி அதிகாரி வசந்தி கூறுகையில், “இது போன்ற திட்டங்கள் மாணவர்களின் புத்திசாலித்தனம், மற்ற திறமைகளையும் வெளிக்கொண்டு வருகிறது” என தெரிவித்தார்.

மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களை வளப்படுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் இந்த முயற்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும். ஏழை மாணவர்களுக்கும் இது ஒரு வழிகாட்டியாக அமையும் என கல்வி வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.