Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

17 ஆண்டுகளுக்கு பிறகு ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம் – காஞ்சிபுரத்தில் விடுமுறை அறிவிப்பு

Holiday Declared in Kanchipuram: கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள மிக முக்கிய சிவ தலங்களில் ஒன்றான ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் டிசம்பர் 8, 2025 அன்று 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அங்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

17 ஆண்டுகளுக்கு பிறகு ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம் – காஞ்சிபுரத்தில் விடுமுறை அறிவிப்பு
காஞ்சிபுரத்தில் 17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் கும்பாபிஷேகம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 07 Dec 2025 17:53 PM IST

காஞ்சிபுரம், டிசம்பர் 8 : தமிழகத்தில் உள்ள சிவ தலங்களில் மிக முக்கிய தலமான காஞ்சிபுரத்தில் (Kanchipuram) உள்ள ஏகாம்பரநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இந்து அறநிலையத்துறை சார்பாக ரூ.28 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற்ற நிலையில் கடந்த 17 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் 8, 2025 அன்று கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

பள்ளிகளுக்கு விடுமுறை

காஞ்சிபுரத்தில் உள்ள மிக முக்கிய சிவ தலங்களில் ஒன்றான ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் டிசம்பர் 8, 2025 அன்று கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவிருப்பதால், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர். அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளன.

இதையும் படிக்க : டெல்டா, தென் தமிழகத்தில் தொடரும் மழை.. சென்னையில் மழை இருக்காது – வெதர்மேன் பிரதீப் ஜான்..

கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவ தலங்களில் ஏகாம்பரநாதர் கோவில். இது தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்று. இங்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக தமிழக அறநிலையத்துறை சார்பில் 28 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன. ராஜகோபுரத்தில் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், டிசம்பர் 8, 2025 அன்று அதிகாலை 5.45 மணியளவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்றும் அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருக்கிறார். 

தங்க ரதம் ஒப்படைப்பு

 

இதையும் படிக்க : தந்தையின் உயிரை பறித்த யானை தெய்வானை.. பாகனின் மகள்கள் செய்த நெகிழ்ச்சி செயல்!!

இந்த நிலையில் காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளையின் மூலம் உருவாக்கப்பட்ட தங்க ரதத்தினை அதன் நிர்வாகிகள் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் ஒப்படைத்ததாக தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த தங்க ரதம் டிசம்பர் 8, 2025 அன்று நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.