Rain Alert | தமிழகத்தில் இன்று இந்த 9 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. வானிலை மையம் அலர்ட்!!
Today rain: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிமடைந்து வரும் நிலையில், 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தென் தமிழகம், வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் முன்னறிவித்துள்ளது. அதோடு, ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் கூறியுள்ளது.

கோப்புப்படம்
சென்னை, நவம்பர் 06: தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கக்கூடும் என்றும் கூறியுள்ளது. தொடர்ந்து, தமிழக உள்பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்றும் நாளையும், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தொடர்ந்து, நவம்பர் 11 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாகவும் முன்னறிவித்துள்ளது.
Also read: கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை.. நள்ளிரவில் 3 பேரை சுட்டுப்பிடித்து காவல்துறை அதிரடி..
நேற்று காலை வரையிலான நிலவரப்படி, சென்னை மாவட்டம், ஆலந்துார், விமான நிலையம், மீனம்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ, பூந்தமல்லி, தாம்பரம் பகுதிகளில் தலா 2 செ.மீ மழை பெய்துள்ளது.
9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:
அதன்படி, தமிழகத்திலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் இடி, மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:
தொடர்ந்து, நாளை ( நவம்பர் 7) தமிழகத்திலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.அதோடு, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, நவம்பர் 8ஆம் தேதி தென் தமிழகத்திலும், வட தமிழகத்திலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also read: நறுக்கு நறுக்கு என்று குட்டியதை முதல்வர் மறந்துவிட்டாரா? விஜய் ஆவேசம்!
அதேபோல், நவம்பர் 9ஆம் தேதி தென் தமிழகத்திலும், வட தமிழகத்திலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்திலும், வட தமிழகத்திலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.