சென்னை: மனைவி தாலியை அடமானம் வைத்து வாங்கிய கார்.. கதறிய உரிமையாளர்

Chennai Car Accident: ஓ.எம்.ஆர் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் விபத்தில் சிக்கியது. டிரைவர் லேசான காயத்துடன் தப்பினார். காரின் உரிமையாளர் தாலியை அடமானம் வைத்து காரை வாங்கியதாகவும், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். மெட்ரோ பணிகள் காரணமாக பள்ளம் ஏற்பட்டதா என சந்தேகம் எழுந்தது, ஆனால் மெட்ரோ அதை மறுத்தது.

சென்னை: மனைவி தாலியை அடமானம் வைத்து வாங்கிய கார்.. கதறிய உரிமையாளர்

கார் உரிமையாளர் வேதனை

Updated On: 

18 May 2025 14:46 PM

சென்னை மே 18: சென்னையில் ஏற்பட்ட கார் விபத்து (Car accident in Chennai) குறித்து பேட்டியளித்த கார் உரிமையாளர், “என் கார் டிரைவர் ஓட்டி சென்றபோது சிக்னலில் நின்றவழியே சாலை திடீரென உள்வாங்கி, கார் பள்ளத்தில் விழுந்தது. டிரைவருக்கு தலையில் அடிபட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தாலி அடமானம் வைத்து வாங்கிய கார் முழுவதும் சேதமடைந்துள்ளது. ஆனால், உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதது பெரிய அதிர்ஷ்டம்.  ஓ.எம்.ஆர் சாலையில் மெட்ரோ (OMR Metro Work) மற்றும் மேம்பால பணிகளுக்குப் பிறகு தான் இப்படி பள்ளங்கள் ஏற்படுகின்றன. கூலி தொழிலாளர்களின் வாகனங்களுக்கு இந்நிலை ஏற்பட்டால், அரசு முன் எச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

தாலியை அடமானம் வைத்து வாங்கப்பட்ட கார்: உரிமையாளர் வேதனை

விபத்து தொடர்பாக வாகன உரிமையாளர், “முழுக்க சேதமடைந்த கார் தாலியை அடமானம் வைத்து வாங்கியதுதான். ஆனால் உயிருக்கு எதுவும் ஆகாதது பெரிய விஷயம். அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். கூலித் தொழிலாளர்களின் வாகனங்களுக்கு இப்படி பாதிப்பு ஏற்படும்போது நாங்கள் என்ன செய்வது?” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இச்சம்பவம், சாலைகளின் பாதுகாப்பு மற்றும் நகரத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளின் தாக்கம் குறித்து மேலும் கவனம் செலுத்த வேண்டியதையொட்டி உள்ளது. போலீசார் தற்போது விபத்து தொடர்பான மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓ.எம்.ஆர் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்

ஓ.எம்.ஆர் சாலையில் திடீரென உள்வாங்கி உருவான பள்ளத்தில் கார் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது. தரமணியிலிருந்து திருவான்மியூர் நோக்கிச் செல்லும் இந்தப் பாதையில், டைடல் பார்க் சிக்னல் அருகே ஏற்பட்ட பள்ளத்தில், சிக்னலில் நின்றுகொண்டிருந்த வாடகை கார் திடீரென கவிழ்ந்தது.

பெரிய காயமின்றி தப்பிய ஐந்து பேர்

மரியதாஸ் சோழிங்கநல்லூரைச் சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர், விக்னேஷ் (45) என்ற பயணியை அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சென்ட்ரல் ரயில்வே நிலையம் நோக்கி அழைத்து செல்லும் போதே இந்த விபத்து நிகழ்ந்தது. 2025 மே 17 ஆம் தேதி மாலை 6:30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், கார் பள்ளத்தில் விழுந்ததால் ஓட்டுநர் மட்டும் லேசான காயம் பெற்றார். மற்ற நான்கு பயணிகள் சிறிதும் காயமின்றி மீட்கப்பட்டனர்.

சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல்

விபத்துக்குப் பின்னர் தகவல் அறிந்து வந்த பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு, க்ரேன் உதவியுடன் காரையும், உள்ளிருந்தவர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றினர். இந்த சம்பவம் காரணமாக அந்தப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

முதலில், மெட்ரோ ரயில் பணிகளின் காரணமாக பள்ளம் ஏற்பட்டதாக கூறப்பட்டாலும், மெட்ரோ நிர்வாகம் அதை மறுத்துள்ளது. சாலையின் அடியில் இருந்த கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட கசிவுதான் காரணம் என மெட்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விபத்திடம் இருந்து சில அடிகள் தொலைவில் மெட்ரோ சுரங்கப்பாதை பணிகள் நடந்து வந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.