“களத்தில் தவெக – திமுக இடையே மட்டும் தான் போட்டி”.. விஜய் பரபர பேச்சு!

சென்னை, பிப்ரவரி 02: திமுகவை எதிர்த்து கேள்வி கேட்க தவெகவை தவிர வேறு யாருக்கும் தைரியம் இல்லை என விஜய் தெரிவித்துள்ளார். சென்னை பனையூரில் தவெக 3ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், மக்களின் கண்ணீரை துடைக்க தொடங்கப்பட்டதே தவெக என்று அவர் கூறியுள்ளார்.

களத்தில் தவெக - திமுக இடையே மட்டும் தான் போட்டி.. விஜய் பரபர பேச்சு!

தவெக தலைவர் விஜய்

Updated On: 

02 Feb 2026 13:17 PM

 IST

சென்னை, பிப்ரவரி 02: திமுகவை எதிர்த்து கேள்வி கேட்க தவெகவை தவிர வேறு யாருக்கும் தைரியம் இல்லை என விஜய் தெரிவித்துள்ளார். சென்னை பனையூரில் தவெக 3ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், மக்களின் கண்ணீரை துடைக்க தொடங்கப்பட்டதே தவெக என்று அவர் கூறியுள்ளார். எம்ஜிஆர் கட்சியை ஆரம்பித்தபோது வைத்த அதே விமர்சனத்தை என் மீதும் வைக்கின்றனர். டெல்லியை பகைத்துக்கொள்ள மாட்டார், செய்தியாளர்களை சந்திக்க மாட்டார் என்றெல்லாம் எம்ஜிஆரை விமர்சித்தனர். தற்போது என் மீதும் அதே விமர்சனத்தையே வைக்கின்றனர், என் மீது வைக்கும் விமர்சனங்களையாவது கொஞ்சம் புதுசாக மாற்றி கூறுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: தவெக தலைவர் விஜய் செய்தியாளர்கள் சந்திப்பு…எப்போது தெரியுமா..அருண் ராஜ் கூறிய பதில்!

கண்ணீர் வடித்த தமிழக மக்கள்:

2017க்கு பின், 2021க்கு அப்புறம் தமிழ்நாட்டு நிலைமைய பார்த்து யோசித்த தமிழக மக்கள் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமர்கின்ற நிலை ஏற்பட்டுவிட்டதே என கண்ணீர் வடித்தனர். அந்தக் கண்ணீரை துடைக்க ஆரம்பிக்கப்பட்டது தான் தமிழக வெற்றிக்கழகம் என்றார்.

மக்களுடையே ஒரே பிரதிநிதி நாங்கள்:

மக்களுடையே ஒரே பிரதிநிதி நாங்கள் மட்டும் தான் என கூறிய விஜய், தமிழ்நாட்டில் மிகப்பெரியக கட்சியாக தவெக வளர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். தொண்டர்களை நம்பிதான் நானும் கட்சியும் உள்ளது. தற்போது சட்டமன்ற தேர்தலில் மும்முனை போட்டி, நான்கு முனை போட்டி என்று சொல்கிறார்கள். ஆனால், தவெக, திமுக, பாஜக தலைமையில் மற்றும் பலர் உள்ளனர். எனினும், களத்தில் தவெக மற்றும் திமுக தலைமையிலான அணி இடையே மட்டும் தான் போட்டி நிலவுகிறது என்றார். ஏற்கெனவே, களத்திலேயே இல்லாதவர்கள் அதிமுக என ஏற்கெனவே விமர்சித்த நிலையில், தற்போது பாஜக தலைமையில் மற்றும் பலர் என கூறி அதிமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

வீட்டை விட்டு வெளியே வா:

என் மீது வைக்கப்படும் விமர்சனமாக, வீட்டை விட்டு வெளியே வா, வெளியே வா என்று பலர் கூறுகின்றனர். அவர்களுக்கெல்லாம் நான் கூறுவது, மக்கள் உரிய நேரத்தில் வாக்களர் அட்டையுடன் வெளியே வருவார்கள் என்றார். கருத்துக் கணிப்பு என்பது கடுப்பில் விட்ட கணிப்பு என விமர்சித்த அவர், வீடு வீடாக கருத்துக் கணிப்பு நடத்தினால் ஒவ்வொரு வீட்டிலும் தவெக இருக்கும் என்றார். மேலும், தவெகவின் விசில் சின்னம் போகாத ஊரே இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க: திமுக கூட்டணியில் மதிமுக தொடர்வதில் சந்தேகம்?…புயலை கிளப்பிய மல்லை சத்யா!

அதீத நம்பிக்கையில் பேசவில்லை:

டப்பா எஞ்சின் உள்ளிட்ட எந்த எஞ்சின் வந்தாலும், டாப் எஞ்சின் தவெக தான் என்று மக்கள் முடிவெடுத்துவிட்டனர். நான் அதீத நம்பிக்கையில் பேசுவதாக எண்ண வேண்டாம், மக்கள் இந்த விசிலை ஊதும் ஊதில், தீய சக்தியும், ஊழல் சக்தியும் தெரித்து ஓட வேண்டும். அன்று சென்ட் ஜார்ஜ் கோட்டையில் தவெக ஆளும் கட்சியாக எழும். உங்களுடன், நான் இருக்கிறேன். என்னுடன் நீங்கள் இருக்கிறீர்கள். மக்கள் நம்முடன் இருக்கிறார்கள் தைரியமாக இருங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

ரூ.15 லட்சம் செலவுசெய்து வளரப்பு நாயை ஆஸ்திரேலியா கொண்டு சென்ற இந்திய தம்பதி
அசாமில் 80 மீட்டர் பாலத்தை உருவாக்கிய அசாம் இளைஞர்
மரணத்திற்குப் பின்னும் வாழ்க்கை உண்டா? மரணத்தை வெல்ல நிபுணர்கள் முயற்சி
உருவாகிறது ரஜினிகாந்தின் பயோபிக்.. இணையும் தனுஷ் - ஐஸ்வர்யா?.. வந்தது குட்நியூஸ்!!