டெல்டாக்காரன் என சொல்லும் முதல்வர் விவசாயிகளுக்கு விரோதியாக செயல்படுகிறார் – நயினார் நாகேந்திரன்..
Nainar Nagendran: அதிமுக தரப்பில் தேர்தல் பணிகள் ஒரு பக்கம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பாஜக தரப்பிலும் தேர்தலை சந்திப்பதற்கான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாவட்டம் தோறும் சென்று மக்களை சந்தித்து உரையாற்றி வருகிறார். அந்த வகையில் காஞ்சிபுரத்தில் மக்களை சந்தித்துப் பேசியுள்ளார்.

கோப்பு புகைப்படம்
காஞ்சிபுரம், டிசம்பர் 11, 2025: காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், காஞ்சிபுரத்தின் முக்கிய நீராதாரமான வேகவதி ஆற்றில் சாக்கடை கழிவு கலக்கப்படும் நிலையில், நீர்நிலைகளை மேம்படுத்துவதற்கு 10,000 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாக திமுக சொன்னது என்ன ஆனது என கேள்வி எழுப்பினார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை மும்முறையாக மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரையில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. அதில், தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுக பாஜகவுடன் கைகோர்த்து இந்த தேர்தலை சந்திக்க உள்ளது.
அதிமுக தரப்பில் தேர்தல் பணிகள் ஒரு பக்கம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பாஜக தரப்பிலும் தேர்தலை சந்திப்பதற்கான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாவட்டம் தோறும் சென்று மக்களை சந்தித்து உரையாற்றி வருகிறார். அந்த வகையில் காஞ்சிபுரத்தில் மக்களை சந்தித்துப் பேசியுள்ளார்.
மேலும் படிக்க: 2026-ல் கைக்கோர்க்கும் பாமக – தவெக? போராட்டத்தில் கலந்துக்கொள்ள நேரில் அழைப்பு..
10,000 கோடி ரூபாய் என்னாச்சு? நயினார் நாகேந்திரன் கேள்வி:
அப்போது பேசிய அவர், “காஞ்சிபுரத்தின் முக்கிய நீராதாரமான வேகவதி ஆற்றில் சாக்கடை கழிவு கலக்குகிறது. கழிவுகளை சுத்தப்படுத்த எந்த முயற்சியும் செய்யவில்லை. நீர்நிலைகளை மேம்படுத்துவதற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் (10,000 கோடி என முன்பு கூறப்பட்டதாக) ஒதுக்கி இருப்பதாக திமுக சொல்லியது தற்போது வரை செயல்பாடாக மாறவில்லை.
ஒன்றியம் தோறும் தானியக் கிடங்குகள், நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என கூறியதும் திமுக இன்று வரை செயல்படுத்தவில்லை. ‘நான் டெல்டாக்காரன்’ என்று சொல்லும் முதல்வர் ஸ்டாலின், விவசாயிகளின் விரோதியாக நடந்து வருகிறார்,” என தெரிவித்தார்.
மேலும் படிக்க: தொகுதி பங்கீடா? எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்!
விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் பிரதமர் மோடி:
மேலும் அவர், “கோவைக்கு வந்த பிரதமர் மோடி இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து சென்றார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. கோவையில் இருந்தபோது, முழு நாட்டின் விவசாயிகளுக்கும் ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியவர் பிரதமர் மோடி. ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நியூவை மானிய விலையில் 300 ரூபாய்க்கு வழங்கியவர். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலினோ எதுவுமே செய்யவில்லை,” எனவும் பேசியுள்ளார்.