கரூர் சம்பவம் – பாஜக சார்பில் 8 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு – யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?

Karur Stampede : கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.. இதுகுறித்து விசாரிக்க பாஜக சார்பில் எம்பி ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை பாஜக அமைத்துள்ளது.

கரூர் சம்பவம் - பாஜக சார்பில் 8 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு - யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?

ஜேபி நட்டா

Published: 

29 Sep 2025 17:21 PM

 IST

கரூரில் கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri Kazhagam) சார்பாக அக்கட்சியின் தலைவர் விஜய் (Vijay) பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமைடந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விடுமுறை தினம் என்பதால் விஜய்யைக் காண கட்டுக்கடங்காமல் கூட்டம் கூடியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை வழங்க முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாஜக சார்பில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

பாஜக சார்பில் 8 பேர் கொண்ட குழு

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் இது குறித்து விசாரிக்க பாஜக எம்பி ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைத்து அக்கட்சியின் தலைவர் ஜேபி நட்டா உத்தரவிட்டார். இதில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், சிவசேனா எம்பி ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் எம்பி தேஜஸ்வி சூர்யா, எம்பி ரேகா சர்மா, தெலுங்கு தேசம் கட்சியின் எம்பி புட்டா மகேஷ் குமார் ஆகியோரும் தமிழகம் வந்த ஆய்வு நடத்தவுள்ளனர்.

இதையும் படிக்க : விஜய் வீட்டுக்கு வெடி குண்டு மிரட்டல் – நிபுணர்கள் தீவிர சோதனை

பாஜகவின் விசாரணைக் குழு விவரம்

 

இதையும் படிக்க : கரூர் சம்பவம்… எந்த ஒரு கட்சித் தலைவரும் விரும்ப மாட்டார்…. முதல்வர் ஸ்டாலின் வருத்தம்

தவெகவின் மனுவை ஏற்க மறுப்பு

தவெக தரப்பு மனுவை செப்டம்பர் 29, 2025 அன்று ஏற்க மறுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நாளை செப்டம்பர் 30, 2025 அன்று தாக்கல் செய்ய அறிவுறுத்தினர். மேலும் நாளை தாக்கல் செய்தாலும் வெள்ளிக்கிழமை தான் விசாரணை நடத்தப்படும் என கூறப்படுகிறது. இதனைடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட தவெகவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

வாரணாசி பட நிகழ்வில் நடந்த சுவாரசியங்கள்.... பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ!
ஊழியர்களை கண்காணிக்க புதிய கருவியை பயன்படுத்தும் Cognizant!
ஐபிஎல் ஏலம்.. எப்போது? எங்கு நடைபெறுகிறது? 
மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு மத்திய அரசின் 5 இலவச AI படிப்புகள்.. என்னென்ன தெரியுமா?