திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியல்… அமைச்சர் காந்தி முதல் பெரியகருப்பன் வரை!
DMK Ministers Assets: திராவிட முன்னேற்றக் கழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் சொத்து பட்டியலில் எவ்வளவு சொத்து மதிப்புகளுடன் எந்தெந்த அமைச்சர்கள் எந்தெந்த இடங்களில் உள்ளனர் என்பதை இந்தப் பதிவில் சற்று விரிவாக பார்க்கலாம். இந்த தகவல் அவர்களின் பிரமாண பத்திரத்தின் அடிப்படையிலானது.

அமைச்சர் காந்தி முதல் பெரியகருப்பன் வரை சொத்து பட்டியல்
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள அமைச்சர்கள் பெயரில் எவ்வளவு அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளன என்பது குறித்த விவரங்கள் அவர்கள் அளித்த பிரமாண பத்திரத்தின் அடிப்படையில் இங்கே வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.111 கோடி சொத்துக்களுடன் முதல் இடத்தில் அமைச்சர் காந்தி உள்ளார். அடுத்தடுத்து இடங்களில் உள்ள அமைச்சர்கள் குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
மேலும் படிக்க: திமுக அமைச்சர்கள் சொத்து பட்டியல் பார்ட் 2: ராஜ கண்ணப்பன் முதல் சக்கரபாணி வரை… முழு விவரம் உள்ளே!
முதல் இடத்தில் அமைச்சர் ஆர்.காந்தி
அமைச்சர் காந்தி: இவரது பெயரில் அசையும் சொத்து ரூ.39.55 கோடி. மனைவி பெயரில் ரூ.19 கோடி. அசையா சொத்து- அமைச்சர் பெயரில் ரூ.51 கோடி, மனைவி பெயரில் ரூ.1.73 கோடி உள்ளது.
அமைச்சர் துரைமுருகன்: இவரது பெயரில் அசையும் சொத்து- ரூ.4 கோடி, மனைவி பெயரில் ரூ.14 கோடி. அசையா சொத்து- ரூ.7 கோடி, மனைவி பெயரில் ரூ.47 கோடி உள்ளது.
அமைச்சர் டிஆர்பி ராஜா: இவரது பெயரில் அசையும் சொத்து- ரூ.8.50 கோடி, மனைவி பெயரில் ரூ.22.82 கோடி, மகன் பெயரில் ரூ.23 லட்சம், மகள் பெயரில் ரூ.81 லட்சம். அசையா சொத்து- அமைச்சர் பெயரில் ரூ.60 லட்சம், மனைவி பெயரில் ரூ.37 கோடி, மகன் பெயரில் ரூ.62 லட்சம், மகள் பெயரில் ரூ.38 லட்சம் உள்ளது.
அமைச்சர் தியாகராஜன்: அமைச்சர் பெயரில் அசையும் சொத்து ரூ.21 கோடி, மனைவி பெயரில் ரூ.4.8 கோடி, மூத்த மகன் பெயரில் ரூ.3.10 கோடி, இளைய மகன் பெயரில் ரூ.2.72 கோடி. அசையா சொத்து- அமைச்சர் பெயரில் ரூ.17 கோடி, மனைவி பெயரில் ரூ.78 லட்சம் உள்ளது.
துணை முதல்வர் உதயநிதி: உதயநிதி பெயரில் அசையும் சொத்து ரூ.12.92 கோடி, மனைவி பெயரில் ரூ.13.25 கோடி. அசையா சொத்து- உதயநிதி பெயரில் ரூ.7.72 கோடி, மனைவி பெயரில் எதுவும் இல்லை.
அமைச்சர் கீதா ஜீவன்: அமைச்சர் பெயரில் அசையும் சொத்து ரூ.1.16 கோடி, கணவர் பெயரில் ரூ.2.32 கோடி. அசையா சொத்து அமைச்சர் பெயரில் ரூ.3.64 கோடி. கணவர் பெயரில் ரூ.20 கோடி உள்ளது.
அமைச்சர் சுவாமிநாதன்: இவரது பெயரில் அசையும் சொத்து ரூ.5.10 கோடி. மனைவி பெயரில் ரூ.6.51 கோடி. கூட்டு குடும்பம் ரூ.3.99 கோடி. அசையா சொத்து- அமைச்சர் பெயரில் ரூ.2.95 கோடி, மனைவி பெயரில் ரூ.1.88 கோடி, கூட்டு குடும்பம் ரூ.7.53 கோடி.
அமைச்சர் பெரிய கருப்பன்: இவரது பெயரில் அசையும் சொத்து ரூ.7.62 கோடி, மனைவி பெயரில் ரூ.11 கோடி, கூட்டு குடும்பம் ரூ.2.54 கோடி. அசையா சொத்து அமைச்சர் பெயரில் ரூ.1.49 கோடி, மனைவி பெயரில் ரூ.1.81 கோடி, கூட்டு குடும்பம் ரூ.1.45 கோடி சொத்துக்கள் உள்ளது.
மேலும் படிக்க: திமுக அமைச்சர்களில் குறைந்த சொத்து மதிப்புடையவர் யார் தெரியுமா… கவனம் ஈர்க்கும் தகவல்!