AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்.. தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்த உத்தரவு..

மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொதுச் சுகாதாரத்துறை அனுப்பியுள்ள அறிக்கையில், நிபா வைரஸ் என்பது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு ஆபத்தான வைரஸ் தொற்று நோயாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பழம் தின்னும் வெளவால்கள் மூலம் இந்த வைரஸ் அதிகமாக பரவுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட விலங்குகள் அல்லது நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதன் மூலமும் இந்த தொற்று பரவ வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்.. தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்த உத்தரவு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 13 Jun 2026 10:21 AM IST

ஜூன் 13, 2026: கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட நபருக்கு மருத்துவக் குழுவினர் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அதே சமயத்தில், அவருடன் தொடர்பில் இருந்த மூன்று பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நிபா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக கோழிக்கோடு மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், கேரளாவின் பல்வேறு மாவட்டங்களுக்கும் நிபா வைரஸ் பரவல் தொடர்பாக முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்:

இந்த சூழலில், தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பொதுச் சுகாதாரத்துறை, எல்லையோர மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட கேரள எல்லையை ஒட்டிய மாவட்டங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ‘வீடு லீசுக்கு போறீங்களா?’ சென்னையில் அரங்கேறிய பல லட்ச ரூபாய் நூதன மோசடி.. உஷார் மக்களே!!

மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொதுச் சுகாதாரத்துறை அனுப்பியுள்ள அறிக்கையில், நிபா வைரஸ் என்பது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு ஆபத்தான வைரஸ் தொற்று நோயாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பழம் தின்னும் வெளவால்கள் மூலம் இந்த வைரஸ் அதிகமாக பரவுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட விலங்குகள் அல்லது நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதன் மூலமும் இந்த தொற்று பரவ வாய்ப்பு உள்ளது.

எவருக்கேனும் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல், கடுமையான தலைவலி, வாந்தி, சோர்வு, இருமல், சுவாசக்குறைவு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிலருக்கு மூளை அழற்சி, மயக்கம் மற்றும் நினைவிழப்பு போன்ற கடுமையான பாதிப்புகளும் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

தனி அறையில் சிகிச்சை:

அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வரும் நபர்களுக்கு உடனுக்குடன் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களை தனி அறைகளில் வைத்து கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களை விரைவாக கண்டறிந்து அவர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவ பணியாளர்கள் கட்டாயமாக முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் தேவையற்ற அச்சம் அடைய வேண்டாம் என்றும், அதே நேரத்தில் சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. பழங்கள் சாப்பிடுவதற்கு முன்பு நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும் என்றும், வெளவால்கள் கடித்த பழங்களை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow Us