Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னை – விழுப்புரம் வழித்தட ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் ரயில் பகுதி நேர ரத்து.. முழு விவரம்..

Chennai Villupuram Train: சென்னை எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள ஓலக்கூர் பணிமனையில் டிசம்பர் 30, 2025 மற்றும் டிசம்பர் 31, 2025 ஆகிய தேதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த வழித்தடத்தில் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.

சென்னை – விழுப்புரம் வழித்தட ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் ரயில் பகுதி நேர ரத்து.. முழு விவரம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 30 Dec 2025 07:25 AM IST

டிசம்பர் 30, 2025: சென்னை எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள ஓலக்கூர் பணிமனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், இந்த வழித்தடத்தில் இயங்கக்கூடிய ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், ரயில் சேவைகள் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக விசேஷ நாட்கள், விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்கள் போன்ற சமயங்களில் மக்கள் இந்த ரயில் சேவையை பெரிதும் நம்பி உள்ளனர். மக்களின் வசதிக்காக ரயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை எழும்பூரில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக, சென்னையில் இருந்து புறப்படக்கூடிய குருவாயூர் விரைவு, பாண்டியன் விரைவு, வைகை விரைவு உள்ளிட்ட பல ரயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்கப்பட்டன.

மேலும் படிக்க: உமன் பவரால் மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி.. மகளிர் அணி மாநாட்டில் முதல்வர் பெருமிதம்..

சென்னை – விழுப்புரம் வழித்தட ரயில் சேவையில் மாற்றம்:

அதனைத் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பிறகு, மீண்டும் இந்த ரயில்கள் எழும்பூரிலிருந்து வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, சென்னை எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள ஓலக்கூர் பணிமனையில் டிசம்பர் 30, 2025 மற்றும் டிசம்பர் 31, 2025 ஆகிய தேதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த வழித்தடத்தில் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.

ஓலக்கூர் பணிமனையில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள்:

இது தொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள ஓலக்கூர் பணிமனையில் இன்றும் நாளையும் பகல் 12.15 மணி முதல் மாலை 3.45 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: புத்தகம் இருக்கும் கைகளில் பட்டாக்கத்திகள்.. இதற்கு யார் பொறுப்பு – எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி..

இதன் அடிப்படையில், தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் பயணிகள் ரயில், தொழுபேடு – விழுப்புரம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், விழுப்புரத்திலிருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் பயணிகள் ரயில், விழுப்புரம் – தொழுபேடு இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு நாட்கள் பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பின்னர், ஜனவரி 1, 2026 ஆம் தேதி முதல் ரயில் சேவைகள் வழக்கம்போல் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் வசதிக்காகவும், எந்தவித சிரமமும் இன்றி பயணம் மேற்கொள்ளும் வகையிலும், தெற்கு ரயில்வே தரப்பில் ஒவ்வொரு வழித்தடத்திலும் இத்தகைய பராமரிப்பு பணிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்படுவது வழக்கமான ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.