AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தொடர் கனமழை எதிரொலி.. வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..

School Leave: கோவை மாவட்டம் வால்பாறையில் தென் மேற்கு பருவமழை காரணமாக தொடர் கனமழை பதிவாகி வருகிறது. இதன் காரணமாக இன்று ஜூன் 26, 2025 தேதியான இன்று வால்பாறை தாலுக்காவில் இருக்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர் கனமழை எதிரொலி.. வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 26 Jun 2025 07:30 AM IST

பள்ளி விடுமுறை, 26, ஜூன் 2025: தொடர் கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று அதாவது ஜூன் 26 2025 தேதி ஆன இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையின் தீவிரம் கடந்த சில நாட்களாக குறைந்த நிலையில் மீண்டும் கோவை நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழையின் தீவிரமானது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இன்று அதாவது ஜூன் 26 2025 தேதியான இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பதிவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடரும் கனமழை:

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூன் 26 2025 அன்று தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் ஜூன் 27 2025 மற்றும் ஜூன் 28 2025 ஆகிய இரண்டு நாட்களில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் ஒரு சில இடங்களில் மணிக்கு 50 கிலோமீட்டர் வரை வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கோவை மாவட்டம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் தொடர் கன மழை பெய்து வரும் காரணமாக கோவையில் இருக்கும் வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீறி செயல்பட்டால் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதா?


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை ஒரு பக்கம் இருந்தாலும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதனைத் தொடர்ந்து தஞ்சாவூரில் 38 டிகிரி செல்சியஸும், தூத்துக்குடியில் 37.6 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை பதிவானது. சென்னை பொறுத்த வரையில் நுங்கம்பாக்கத்தில் 33.8 டிகிரி செல்சியஸும் சென்னை மீனம்பாக்கத்தில் 34.1 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Follow Us