அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்.. கரூர் உள்ளிட்ட 4 மாவட்ட எஸ்.பிக்கள் அதிரடி மாற்றம்..

தமிழகத்தில் வரவிருக்கும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்.. கரூர் உள்ளிட்ட 4 மாவட்ட எஸ்.பிக்கள் அதிரடி மாற்றம்..

கோப்பு புகைப்படம்

Published: 

16 Mar 2026 19:30 PM

 IST

சென்னை, மார்ச் 16, 2026: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில் நான்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வரவிருக்கும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நேற்று மாலை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க: ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

4 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம்:

இந்த நிலையில் கரூர், ஈரோடு, நாகை மற்றும் விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா பாரபட்சமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஹரிதரன் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க: எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது.. வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்..

அதேபோல் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கிரண் ஸ்ருதிதி, நாகை மாவட்டத்திற்கு சுர்ஜித் குமார் மற்றும் விருதுநகர் மாவட்டத்திற்கு ஸ்ரீநதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் தேர்தல் முடியும் வரை தேர்தல் தொடர்பான எந்த பணிகளிலும் ஈடுபடக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..