சென்னையில் PG விடுதி கட்டணங்கள் உயர்வு.. அதிர்ச்சியில் பேச்சுலர்ஸ்..

இந்த சிக்கலான சூழ்நிலையில் மர அடுப்புகளை பயன்படுத்தி உணவு தயாரித்து வழங்கி வருவதாகவும், மரக்கட்டைகள் மற்றும் மளிகைப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மே 5ஆம் தேதி முதல் புதிய கட்டணங்கள் அமலுக்கு வரும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் PG விடுதி கட்டணங்கள் உயர்வு.. அதிர்ச்சியில் பேச்சுலர்ஸ்..

கோப்பு புகைப்படம்

Published: 

02 May 2026 13:44 PM

 IST

சென்னை, மே 2, 2026: சென்னையில் தங்கும் விடுதிகளின் (PG) கட்டணங்கள் மே 5ஆம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளதாக தமிழ்நாடு ஐடி விடுதி (PG) ஓனர் அசோசியேஷன் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, பேச்சுலர்ஸ் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக, மே 1ஆம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலையை கடுமையாக உயர்த்தின. அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் காரணமாக இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தாறுமாறாக உயர்ந்த சிலிண்டர் விலை:

இதன் காரணமாக, 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.2,246 இலிருந்து ரூ.3,237 ஆக உயர்ந்துள்ளது. இதனால் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலையும் சுமார் 10% வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக வாடிக்கையாளர்கள் வருகை குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க: பரோட்டா ரூ.25 ஆக உயர்வு, பிரியாணி விலை? கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் உணவகங்கள் அறிவிப்பு

இந்த நிலையில், விடுதிகளில் தங்கி வரும் நபர்களுக்கான கட்டணங்களும் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஐடி விடுதி பிஜி ஓனர் அசோசியேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026 பிப்ரவரி மாதம் முதல் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், ஒரு சிலிண்டரை ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கும் விடுதிகளில் கட்டண உயர்வு:

மேலும், இந்த சிக்கலான சூழ்நிலையில் மர அடுப்புகளை பயன்படுத்தி உணவு தயாரித்து வழங்கி வருவதாகவும், மரக்கட்டைகள் மற்றும் மளிகைப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மே 5ஆம் தேதி முதல் புதிய கட்டணங்கள் அமலுக்கு வரும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன:

  • நான்கு பேர் தங்கும் ஏசி இல்லாத சாதாரண அறை: ரூ.6,500 முதல் ரூ.7,500 வரை
  • மூன்று பேர் தங்கும் ஏசி இல்லாத சாதாரண அறை: ரூ.7,000 முதல் ரூ.8,000 வரை
  • இரண்டு பேர் தங்கும் ஏசி இல்லாத சாதாரண அறை: ரூ.8,000 முதல் ரூ.9,000 வரை

இவை குறைந்தபட்ச கட்டணங்கள் மட்டுமே என்றும், வழங்கப்படும் வசதிகளின் அடிப்படையில் விலைகள் மாறுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து, சேவையை மேற்கொள்ள உதவ வேண்டும்” எனவும் அசோசியேஷன் கேட்டுக்கொண்டுள்ளது.

ஏற்கனவே சில விடுதிகளில் காபி, டீ போன்ற பானங்கள் வழங்கப்படாத நிலை உள்ளது. மேலும், சாம்பாருக்கு பதிலாக சட்னி, தயிர் சாதம், கலவை சாதம் போன்ற எளிய உணவுகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த கட்டண உயர்வு வாடிக்கையாளர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..