தவெக தலைவர் விஜய்க்காக ஐஆர்எஸ் பதவியை தூக்கி எறிந்தேன்…அருண்ராஜ்!

Arun Raj speech at Tvk meeting: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயக்காகவே நான் கஷ்டப்பட்டு படித்து பெற்ற ஐ. ஆர். எஸ். பதவியை தூக்கி எரிந்து விட்டு வந்துள்ளேன். தமிழகத்தின் முதல்வராக விஜய் வருவார் என்று அருண் ராஜ் தெரிவித்தார்.

தவெக தலைவர் விஜய்க்காக ஐஆர்எஸ் பதவியை தூக்கி எறிந்தேன்...அருண்ராஜ்!

தவெக அருண் ராஜ்

Updated On: 

18 Dec 2025 12:30 PM

 IST

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 18) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண் ராஜ் பேசியதாவது: விஜய் தமிழக முதல்வராக வர வேண்டும். அவர் அரசியலுக்கு வருவது பதவி மற்றும் பணத்துக்காக அல்ல. தமிழக மக்களின் நலனுக்காகவே. தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் மு. க. ஸ்டாலின் சர்வாதிகாரியாக மாறத் தேவையில்லை. சர்வாதிகாரியாகவே நடந்து வருகிறார். தமிழகத்தில் நல்ல ஆட்சி எப்படி நடத்த வேண்டும் என்று 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் வெற்றி பெற்று திமுகவுக்கு பாடம் எடுப்பார். சாதி, மதம், நல்லவர், கெட்டவர் என்ற வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்கும் நல்லது செய்கின்ற ஒரே தலைவர் விஜய் தான்.

விஜய்க்காக ஐ.ஆர்.எஸ். பதவியை தூக்கி எரிந்தேன்

பணம், பதவி, புகழ் ஆகியவற்றை விஜய் திகட்ட திகட்ட பார்த்துள்ளார். இவற்றையெல்லாம் எதிர்பார்த்து அவர் அரசியலுக்கு வரவில்லை. சினிமா துறையில் இருக்கும் போது இவ்வளவு வசதிகளை கொடுத்த தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அரசியலுக்கு வந்துள்ளார். அந்த நம்பிக்கை எனக்கு இருந்த காரணத்தால் தான் நான் நான் கஷ்டப்பட்டு படித்து பெற்ற ஐ. ஆர். எஸ். பதவியை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்காக தூக்கி எறிந்து விட்டு வந்துள்ளேன்.

மேலும் படிக்க: “தமிழகத்தை ஆளப்போவது விஜய்”.. செங்கோட்டையன் ஈரோட்டில் பேச்சு!

தமிழக மக்கள் மதிக்கும் வகையில்…

மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை சமஸ்கிருதத்தில் மாற்றி உள்ளது. தமிழ்நாட்டு பெண்கள் முதல்வரை நம்ப மாட்டார்கள் என்று தெரிவித்தார். என்னிடம் இருந்த நம்பிக்கை உங்கள் அனைவரிடமும் இருக்கிறதா. இந்த நம்பிக்கை ஒட்டுமொத்த தமிழக மக்கள் மத்தியிலும் உள்ளது. எம்ஜிஆர் ரசிகராக இருக்கும் செங்கோட்டையன் தமிழக மக்கள் மதிக்கும் வகையில் மிகப்பெரிய ஆளுமையாக மாறியுள்ளார்.

ஒரே குடும்பத்துக்காக திமுக ஆட்சி நடக்கிறது

இதேபோல, தமிழக வெற்றி கழகத்தில் உள்ள நபர்களும் தமிழக மக்கள் மதிக்கும் ஆளுமையாக வருவார்கள். விஜய்க்கு ரசிகர்கள் கூட்டமாக இருந்து விடலாம். ஆனால் திமுகவைப் போல கொள்ளையடிக்கும் சுயநல கூட்டமாக இருந்து விடக்கூடாது. திமுக அரசானது குறிப்பிட்ட குடும்பத்துக்காக மட்டுமே ஆட்சி நடத்தி வருகிறது. இந்த குடும்பத்தில் பிறந்தால் ஆட்சி, பதவி, பணம், புகழ் ஆகியவற்றை அனுபவிக்கலாம். ஆனால், மற்றவர்கள் திமுகவுக்காக உழைத்து உழைத்து கடைசியில் பதவி கிடைக்காமல் சாக வேண்டியது தான் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: “மக்கள் பணத்தை மக்களுக்கு கொடுப்பது எப்படி இலவசமாகும்?” ஈரோட்டில் விஜய் கேள்வி

Related Stories
மதுரையில் திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் – தீக்குளித்த இளைஞர் மரணம்
கஞ்சா புகைத்த மாணவர்களை போட்டுக்கொடுத்த சிறுவர்கள் மீது கடும் தாக்குதல் – வீடியோ வைரலான நிலையில் போலீஸ் வழக்குப்பதிவு
ரூ.1000 மதிப்பிலான பட்டுப்புடவை வெறும் ரூ.299 மட்டுமே…. பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி இணையதளம்… நூதன மோசடி
Year Ender 2025 : ஃபாஸ்டாக் வருடாந்திர பாஸ்… ஏஐ மூலம் சுங்க கட்டணம் வசூல் – இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பான திட்டங்கள்
கோவை தெற்கு தொகுதிக்கு குறி வைக்கும் செந்தில் பாலாஜி…என்ன காரணம்!
நாளை அனுமன் ஜெயந்தி…நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1.08 லட்சம் வடை மாலை அணிவித்து வழிபாடு!
உடல் எடையை குறைக்க டயட் இருக்கீங்களா? எச்சரிக்கை உயிருக்கே ஆபத்தாக முடியலாம்
காற்று மாசு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள்.. ஷாக் ரிப்போர்ட்!
திடீரென ரத்தான திருமணம்.. மணமகள் சொன்ன காரணத்தால், உடைந்து போன மணமகன்..
இமயமலையில் கண்டெடுக்கப்பட்ட அணு ஆயுதம்.. பின்னணி என்ன?