அதிமுக ஆட்சி அமையும் – எம்எல்ஏகளுக்கு எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி? பரபரப்பு தகவல்

Edappadi K Palaniswami : புதுச்சேரியில் நடைபெற்ற எம்எல்ஏகள் சந்திப்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர், பொறுத்திருங்கள், நல்லதே நடக்கும். அதிமுக ஆட்சி அமையும் என தனது கட்சி எம்எல்ஏகளுக்கு வாக்குறுதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக ஆட்சி அமையும் - எம்எல்ஏகளுக்கு எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி? பரபரப்பு தகவல்

எடப்பாடி கே பழனிசாமி

Updated On: 

07 May 2026 22:29 PM

 IST

புதுச்சேரி, மே 7 : தமிழக அரசியல் நாளுக்கு நாள் பரபரப்பான சூழ்நிலைகளை சந்தித்து வருகிறது.  யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தவெக ஆட்சியமைக்க அந்த கட்சிக்கு போதுமான ஆதரவு இல்லாததால் ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. இந்த நிலையில் புதுச்சேரியில் நடைபெற்ற எம்எல்ஏகள் சந்திப்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர், பொறுத்திருங்கள், நல்லதே நடக்கும். அதிமுக ஆட்சி அமையும் என தனது கட்சி எம்எல்ஏகளுக்கு வாக்குறுதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவை சேர்ந்த வெற்றிபெற்ற எம்எல்ஏக்கள் தற்போது புதுச்சேரியில் இருக்கும் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிமுக எம்எல்ஏகள் ஒரு சிலர் தவெகவிற்கு ஆதரவளிக்க கோரிக்கை விடுத்துவருவதாகவும் ஆனால் அதற்கு அக்கட்சி தலைமை எதிரான மனநிலையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அக்கட்சி எம்எல்ஏகள் தற்போது புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க : எதன் அடிப்படையில் விஜய்க்கு கான்வாய்? டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி எழுப்பியதாக தகவல்

புதுச்சேரி எம்எல்ஏகள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி

 

இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற புதுச்சேரியில் எம்எல்ஏகளின் சந்திப்பின்போது தவெகவிற்கு  ஆதரவாக அக்கட்சி எம்எல்ஏகள் சிலர் பேசியதாகக கூறப்படுகிறது. இதனையடுத்து தவெகவுக்கு ஆதரவு இல்லை என கூறிய எடப்பாடி பழனிசாமி, பொறுமையாக இருங்கள் என்றும் அதிமுக ஆட்சி அமையும் என்றும் பேசினார்.

மற்றொரு பக்கம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக எம்எல்ஏ கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், மே 10, 2026 அன்று வரை சென்னையிலேயே இருக்குமாறு அறுவுறுத்தியுள்ளார். மேலும், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத வகையில் முடிவு ஏற்பட்டுள்ளது. இது நெருக்கடியான, சிக்கலான காலகட்டம். இன்னொரு தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராக இல்லாத நிலையில், நிலையான ஆட்சி வேண்டுமென்பதே நமது நோக்கம். திராவிட இயக்க கொள்கைகளுக்கு ஊறுவிளைவிக்கும் மதவாத சக்திகளுக்கு இடமளிக்கக்கூடாது என்பதை பரிசீலிப்பதும் கட்டாயம் என பேசியிருந்தார்.

இதையும் படிக்க : தவெக ஆட்சியமைப்பதில் தொடரும் சிக்கல் – விஜய்க்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன?

மேலும் பேசிய அவர், பாஜக பல மாநிலங்களில் செய்ததையே, காங்கிரஸ் தமிழ்நாட்டில் நமக்கு செய்திருக்கிறது. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகிய காங்கிரஸின் நிலைப்பாடு கடும் கண்டனத்துக்குரியது. தோழமை சக்தியின் காலை வாரி, நட்பு சக்திகளுக்கு துரோகம் செய்த காங்கிரஸின் திடீர் மாற்றத்தை கண்டிக்கிறோம் என்று தெரிவித்தார்.

 

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..