திடீரென வந்த உத்தரவு.. இபிஎஸ் பரப்புரையில் மாற்றம்.. என்ன மேட்டர்?

Edappadi Palaniswami Campaign : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2025 அக்டோபர் 5,6ஆம் தேதி நடக்கவிருந்த பரப்புரை கூட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2025 அக்டோபர் 8,9ஆம் தேதிகளில் நாமக்கல், ஈரோட்டி பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

திடீரென வந்த உத்தரவு.. இபிஎஸ் பரப்புரையில் மாற்றம்.. என்ன மேட்டர்?

எடப்பாடி பழனிசாமி

Updated On: 

05 Oct 2025 07:57 AM

 IST

சென்னை, அக்டோபர் 05 : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, நாமக்கல் பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், பிரச்சார திட்டத்தில் அதிமுக தலைமை மாற்றியமைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களை உள்ளன. இதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக தேர்தலுக்கு ஓராண்டும் முன்பே தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக எனது பரப்புரையை தொடங்கியது. ஜெயலலிதா பாணியில் கொங்கு மண்டலத்தில் இருந்து 2025 ஜூலை ஏழாம் தேதி தனது பிரச்சாரத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கினார். மக்களை காப்போம் தமிழரத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்தில் மக்களை சந்தித்து வருகிறார். இந்த பிரச்சனை இந்த பிரச்சாரத்தின் ஆளும் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இதுவரை நான்கு கட்ட பிரச்சாரத்தை முடித்த அவர், தற்போது ஐந்தாம் கட்ட பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தான் ஐந்தாம் கட்ட பரப்புரை திட்டத்தில் அதிமுக தலைமை மாற்றம் செய்துள்ளது. அதாவது, கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தமிழக வெற்றிக்கழக பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் அரசியல் கட்சிகளின் பரப்புரைக்கு அனுமதி வழங்க தடைவிதித்து உத்தரவிட்டது.  இதனால் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளர் மாநாடு எடப்பாடி பழனிச்சாமி பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Also Read : ’கரூரில் நடந்தது சதியல்ல.. விஜய் தார்மீக பொறுப்பேற்க வேண்டும்’ டிடிவி தினகரன் பேச்சு

இபிஎஸ் பரப்புரையில் மாற்றம்


எடப்பாடி பழனிசாமி 2025 அக்டோபர் 5,6 ஆம் தேதிகளில் நாமக்கலில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார். திருச்செங்கோடு தொகுதியில் உள்ள அண்ணா சிலை அருகிலும், குமாரபாளையம் தொகுதியில் உள்ள ஓலப்பாளையத்தில் உள்ள தியேட்டர் அருகையும் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு இருந்தார். அதேபோல நாமக்கலில் அக்டோபர் ஆறாம் தேதி பரமத்தி வேலூர் தொகுதியில் உள்ள நான்கு வழிச்சாலை சந்திப்பில் பரப்புரை மேற்கொள்ளவும் திட்டமிட்டு இருந்தார்.

Also Read : அரசியல் ஆதாயம் தேட கரூர் பயணம்.. முதல்வரை விமர்சித்த இபிஎஸ்!

எனவே உயர் நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி போலீசார் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரைக்கு தடை விதித்துள்ளது. இதனை அடுத்து எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் மாற்றம் செய்து அதிமுக தலைமை அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, 2025 அக்டோபர் 8 ஆம் தேதி திருச்செங்கோடு, குமாரபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் ‌. தொடர்ந்து, 2025 அக்டோபர் 9 ஆம் தேதி நாமக்கல், பரமத்தி வேலூரில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். 2025 அக்டோபர் பத்தாம் தேதி ஈரோடு மாநகர் மொடக்குறிச்சி, ஈரோடு கிழக்கு பகுதியில் பரப்புரை மேற்கொள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.