அதிமுகவின் உத்தேச தொகுதி பங்கீடு பட்டியல்…கூட்டணி கட்சிகளிடம் பல் பிடித்து பதம் பார்க்கப்பட்டதா!

AIADMK Alliance Parties Seat Distribution Intented List: அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக வெளியான உத்தேச பட்டியல் மூலம் அந்தக் கட்சிகளின் பல் பிடித்து பதம் பார்க்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுகவின் உத்தேச தொகுதி பங்கீடு பட்டியல்...கூட்டணி கட்சிகளிடம் பல் பிடித்து பதம் பார்க்கப்பட்டதா!

அதிமுகவின் உத்தேச தொகுதி பங்கீடு பட்டியல்

Published: 

26 Dec 2025 13:18 PM

 IST

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் தமிழகம் வந்து சென்ற பிறகு அரசியல் களம் பரபரப்பாக மாறி உள்ளது. அவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் மேற்கொண்ட சந்திப்பில் அதிமுக- பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் அளிக்க வேண்டும் என்று ஆலோசித்து முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதில், அதிமுகவுக்கு 170, பாஜக, பாமகவுக்கு தலா 23, தேமுதிக, டிடிவி தினகரனுக்கு தலா 6, ஓ. பன்னீர்செல்வத்துக்கு 3 தொகுதிகள் என ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த தகவல் வெளியான சிறிது நேரத்தில் ஓ. பன்னீர்செல்வம் முன்பு சாந்தமாக இருந்ததைப் போல அல்லாமல், மிகவும் ஆக்ரோஷமான முறையில் பேசியிருந்தார். அதில், எடப்பாடி பெயரை சொல்லவே அருவருப்பாக உள்ளது என்ற வார்த்தைகளையும் குறிப்பிட்டிருந்தார்.

கொதித்து கொந்தளித்த கூட்டணி கட்சிகள்

இதே போல, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எங்களது கட்சி எந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்பதையும், எவ்வளவு தொகுதிகளில் போட்டியிடப் போகிறோம் என்பதையும் நாங்கள் தான் முடிவு செய்வோம். எங்களது கூட்டணி தொடர்பான அறிவிப்பு, தொகுதி பங்கீடு குறித்த விவரம் ஜனவரி மாதம் தான் தெரிவிக்கப்படும் என்றும் தற்போது வெளியான தொகுதி பங்கீடு விவகாரம் உண்மைக்கு புறம்பானது என்றும் தனது ஆக்ரோஷத்தை அமைதியாக வெளிப்படுத்தியிருந்தார்.

மேலும் படிக்க: பாமகவில் அடுத்த அதிரடி.. ஜி.கே மணியை கட்சியில் இருந்து நீக்கி அன்புமணி அறிக்கை..

பிரேமலதா விஜயகாந்தின் சாபம்

இதேபோல, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஒரு படி மேலே சென்று தொகுதி ஒதுக்கீடு குறித்து அறிவித்த கட்சி விரைவில் அழிந்து போகும் என்று நேரடியாகவே சாபம் விட்டிருந்தார். ஆனால், இதில் பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே எந்த விதமான கருத்துகளையும் முன் வைக்காமல் இருந்து வருகிறது. தற்போது எதிர் கருத்து தெரிவித்திருந்த கட்சிகள் அனைத்தும் குறைந்த தொகுதிகளை எப்படி ஏற்றுக் கொள்வது, நாங்கள் இல்லாமல் எப்படி தொகுதி ஒதுக்கீடு செய்வது என்பது போன்ற தோணியில் பேசியிருந்தன.

கூட்டணி கட்சிகளிடம் பல் பிடித்து பதம் பார்ப்பு

இந்த நிலையில், அதிமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு விவகாரத்தை, அதிமுக, பாஜக, திமுக ஆகிய கட்சிகள் கிளப்பி விட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால், அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எத்தனை தொகுதிகள் கேட்கும் என்பதை பல் பிடித்து பதம் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதே போல, அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அந்த கூட்டணியில் தொடர்கின்றனவா, அந்த கூட்டணி உறுதியாக உள்ளதா என்பதை ஆராய்வதற்காக திமுக இந்த வேலையை பார்த்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அதிமுக கூட்டணிக்கு வரும் கட்சிகளின் மனநிலை

இதே நேரத்தில், பாஜக தனக்கு 23 தொகுதிகள் என்று குறைத்து ஒதுக்கீடு செய்து இந்த பரபரப்பை கிளப்பி விட்டு இருக்குமா என்ற சந்தேகமும் எழுகிறது. எது எப்படியோ, அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் குறைந்த தொகுதி ஒதுக்கீடு செய்தால் அதனை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லாததும், கூடுதல் தொகுதிகள் கேட்கும் மன நிலையில் இருப்பதும் தெளிவாகியுள்ளது. இதனால், தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் நீண்ட இழுபறி ஏற்படும் என்றே தெரிகிறது.

மேலும் படிக்க: தமிழக சட்டப்பேரவை ஜன.20-இல் கூடுகிறது…சபாநாயகர் மு.அப்பாவு அறிவிப்பு!

சமந்தாவுக்காக ஏர்போர்ட்டில் காதலுடன் காத்திருந்த ராஜ்..... வைரலாகும் வீடியோ
இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் சாதனையுடன் பாக்ஸ் ஆபிஸ் அதிர வைத்த துரந்தர் படம்..
அதிகமாக சாப்பிட்ட வருங்கால மனைவி.. நஷ்ட ஈடு வழங்க தொடுத்த வழக்கு..
ஜப்பானில் கடைப்பிடிக்கப்படும் மெட்டபாலிக் லா.. அப்படி என்ன சட்டம் இது?