79வது சுதந்திர தின கொண்டாட்டம்.. நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம்..

79th Independence Day At Chennai: சென்னையில் நாளை (ஆகஸ்ட் 15,2025) நாட்டின் 79வது சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக,காமராஜர் சாலை முதல் இந்திய ரிசர்வ் வங்கி வரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.

79வது சுதந்திர தின கொண்டாட்டம்.. நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம்..

கோப்பு புகைப்படம்

Updated On: 

14 Aug 2025 11:16 AM

சென்னை, ஆகஸ்ட் 14, 2025: ஆகஸ்ட் 15 2025 தேதியான நாளை நாட்டின் 79வது சுதந்திர தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து மாநிலங்களிலும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. டெல்லியை பொறுத்தவரையில் செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடி ஏற்றி மக்களிடையே உரையாற்றுவார். அதே போல் தமிழகத்தை பொறுத்தவரையில் புனித ஜார்ஜ் கோட்டையில் இருக்கக்கூடிய கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முப்படை வீரர்களின் அணிவகுப்பை ஏற்று கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றுவார். இதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் மூன்று கட்டமாக நடைபெற்றது. 2025, ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் கட்ட ஒத்திகை நிகழ்ச்சி, 2025, ஆகஸ்ட் 11 அன்று இரண்டாம் கட்ட ஒத்திகை நிகழ்ச்சி, ஆகஸ்ட் 13 2025 அன்று இறுதி கட்ட ஒத்திகை நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

79வது சுதந்திர தின கொண்டாட்டம்:

சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது காமராஜர் சாலை முதல் புனித ஜார்ஜ் கோட்டை வரை மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெறும். அதேபோல் முப்படை வீரர்களின் அணிவகுப்பு, காவல்துறை, போக்குவரத்து காவல்துறை, தீயணைப்பு துறை, குதிரை படை உள்ளிட்ட பல்வேறு பிரிவினரின் அணிவகுப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். கொடியேற்றிய பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தகைசால் தமிழர் விருது, அப்துல்கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா உள்ளிட்ட விருதுகள் வழங்குகிறார்.

Also Read: ஆளுநரிடமிருந்து பட்டம் பெற மறுத்த மாணவி.. திமுகவின் தரங்கெட்ட நாடகம்.. அண்ணாமலை காட்டம்..

போக்குவரத்து மாற்றம்:


இந்நிலையில் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவு சின்னம் வரை அமையப்பெற்றுள்ள காமராஜர் சாலை. போர் நினைவு சின்னத்தில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வரை அமைய பெற்றுள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச் சாலை ஆகிய சாலைகளை அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
  • காமராஜார் சாலையிலிருந்து இராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் உழைப்பாளர் சிலையிலிருந்து அண்ணாசாலை. மன்ரோ சிலை. முத்துசாமி பாலம். முத்துசாமி சாலை. ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road) வழியாக பாரிமுனையை சென்றடையலாம்.
  • அண்ணா சாலையில் இருந்து பாரிமுனை நோக்கிச் செல்லும் வாகனங்கள் முத்துசாமி பாலம். முத்துசாமி சாலை. ராஜா அண்ணாமலை மன்றம். வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road) வழியாக பாரிமுனையை அடையலாம்.
  • ராஜாஜி சாலையில் வரும் வாகனங்கள். இருந்து 4 தலைமைசெயலகம் வழியாக காமராஜர் சாலைக்கு செல்ல. பாரிமுனை. வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road). ராஜா அண்ணாமலை மன்றம். முத்துசாமி சாலை. முத்துசாமி பாலம். அண்ணாசாலை. மன்ரோ சிலை மற்றும் வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை அடையலாம்.