வளர்த்து ஆளாக்கிய சித்தி இறந்ததால் சிறப்பு காவல் ஆய்வாளர் விபரீத முடிவு.. திருவள்ளூரில் சோகம்!!
நான்கு நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் வேதவல்லி மரணமடைந்தார். அவரது இழப்பு குமரனை மனரீதியாக மிகவும் பாதித்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் குமரன் தன் கடமைகளை ஆர்.கே.பேட்டை போலீஸ் நிலையத்தில் செய்தார். பிறகு இரவு 9 மணியளவில் வீடு திரும்பினார்.
திருவள்ளூர், ஜனவரி 10: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை பகுதியில் மனதை சோகத்தில் ஆழ்த்தும் நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த குமரன் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை என்பது எந்த சூழலிலும் ஒருவர் எடுக்கக்கூடிய தீர்வு அல்ல. அது ஒரு நொடிநேர முடிவு தான் ஆனால் அதன் விளைவுகள் நிரந்தரமானவை. ஒருவரின் உயிரை மாய்த்துக்கொள்ளும் இந்த செயல், அந்த நபரின் வலியையும் துயரத்தையும் முடிவுக்குக் கொண்டுவரும் போல தோன்றினாலும், பின்னால் நிற்கும் குடும்பத்தார், நண்பர்கள், அன்புக்குரியவர்களுக்கு மறக்க முடியாத ஆழமான காயங்களையும் குற்ற உணர்வையும் விட்டுச்செல்கிறது. அப்படி, திருவள்ளூரில் சிறப்பு காவல் ஆய்வாளரே தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிக்க : 40 வயது மருத்துவருடன் காதல்.. அறையில் பிணமாக கிடந்த மாணவி.. தோண்ட தோண்ட வெளிவந்த பகீர் தகவல்கள்!
குமரனை வளர்த்து ஆளாக்கிய சித்தி:
திருவள்ளூர் ஆர்.கே.பேட்டை அருகே அம்மையார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரன் (59). அவருக்கு மனைவி ஜெயந்தி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இரண்டு மகன்களும் தற்போது சென்னையில் காவல் துறையில் பணியில் உள்ளனர். சிறுவயதில் பெற்றோரை இழந்த குமரனை அவரது சித்தி வேதவல்லி வளர்த்துப் பராமரித்து வந்துள்ளார். நன்றாக படிக்க வைத்து, காவல் துறையில் வேலை கிடைக்க வழிசெய்துள்ளார். இதனால் குமரன் சித்தியிடம் அளவில்லாத பாசத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது.
சித்தி திடீரென உயிரிழந்தார்:
இதனிடையே, நான்கு நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் வேதவல்லி மரணமடைந்தார். அவரது இழப்பு குமரனை மனரீதியாக மிகவும் பாதித்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் குமரன் தன் கடமைகளை ஆர்.கே.பேட்டை போலீஸ் நிலையத்தில் செய்தார். பிறகு இரவு 9 மணியளவில் வீடு திரும்பினார்.
மனமுடைந்த குமரன் தற்கொலை:
தொடர்ந்து, மன அழுத்தத்தில் இருந்த அவர், அன்று நள்ளிரவில் தனது வீட்டில் உள்ள அறைக்குச் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சியில் மூழ்கினர். தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
இதையும் படிக்க : நெல்லையில் ஒரு விசித்திரம்…69 ஆண்டுகளாக வாயில் கல்லுடன் வாழும் முதியவர்…இதுதொடர்பாக அவர் கூறுவதென்ன!
சித்தியை இழந்த துயரத்தால் குமரன் உயிரை மாய்த்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் ஆர்.கே.பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களிடையே மிகுந்த துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)