உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!!
மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தொடர்ந்து, இது அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
சென்னை, நவம்பர் 25: குமரிக் கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதியிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது என்றும், இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதோடு, தமிழகத்தில் நவ.28, 29, 30 மற்றும் டிச.1 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. இந்த நாட்களில் 12- 20 செ.மீ வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் முன்னறிவித்துள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 5% அதிகம் பதிவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், மேலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: நவ.26 அன்று வங்கக்கடலில் உருவாகும் புயல்.. டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழை..
தமிழ்நாட்டில் கனமழை தொடரும்:
தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, 7 முதல் 11 செ.மீ வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் 7 நாட்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், நவ.28, 29, 30 மற்றும் டிச.1 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. இந்த இந்த நாட்களில் 12- 20 செ.மீ வரை மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
உருவான புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி:
குமரிக் கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதியிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தெற்கு வங்கக் கடலில் அந்தமான் அருகே உள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி 6 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் அந்தமான் அருகே உள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை மறுநாள் (நவ.27) புயலாக உருவாகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்:
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் கூறும்போது, மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 5.30 மணி வரை அதேபகுதிகளில் நிலவி வருகிறது. இது அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதியில் வலுவடையக் கூடும். மேலும், இது தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க: தவெகவில் இணையும் செங்கோட்டையன்? தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு!!
மேலும், நேற்று குமரிக்கடல் பகுதிகளில் நலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று காலை குமரிக்கடல் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.