அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரவுடி வெட்டிக்கொலை.. சென்னையில் பகீர்!!

Shocking incident in Chennai: உடனடியாக கீழ்பாக்கம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அவரை சிகிச்சை அனுமதித்துள்ளனர். எனினும், அவர் ஏற்கெனவே, உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, இந்த கொலைக்கு முன்விரோதம் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரவுடி வெட்டிக்கொலை.. சென்னையில் பகீர்!!

மாதிரிப் புகைப்படம்

Updated On: 

12 Jan 2026 08:07 AM

 IST

சென்னை, ஜனவரி 12: சென்னையில் அரசு மருத்துவமனைக்குள் வைத்து ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட மனைவியை பார்க்க வந்தபோது, இந்தக் கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பதறியடித்து மருத்துவமனை வளாக்கத்திற்குள் சிதறி ஓடினர். அதிகாலையில் ஆள்நடமாட்டம் கம்மியாக இருக்கும் என்பதால், தங்களை யாரும் தடுக்க முடியாது என அந்த கும்பல் இக்கொலைக்கு திட்டம் திட்டியதாக தெரிகிறது. தொடர்ந்து, போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.

இதையும் படிக்க : 40 வயது மருத்துவருடன் காதல்.. அறையில் பிணமாக கிடந்த மாணவி.. தோண்ட தோண்ட வெளிவந்த பகீர் தகவல்கள்!

சரித்திர பதிவேடு ரவுடி ஆதி:

ராஜமங்கலத்தை சேர்ந்தவர் ஆதி என்கிற ஆதிகேசவன். இவர் மீது கொளத்தூர், ராஜமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சரித்திர பதிவேடு குற்றவாளி என்றும் கூறப்படுகிறது. இவரது மனைவி பிரசவத்திற்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை பார்ப்பதற்காக கீழ்பாக்கம் மருத்துவமனையின் பின்புறம் உள்ள புதிய கட்டடத்தில் ஆதி இருந்து வந்துள்ளார். இதனை அறிந்த அவரது எதிரிகள் இன்று அதிகாலையிலேயே மருத்துவமனைக்குள் வந்துள்ளனர்.

சரமாரியாக அரிவாள் வெட்டு:

தொடர்ந்து, ஆதி இருக்கும் கட்டடத்தை அறிந்த அந்த கும்பல், தலைக்கவசம் அணிந்தபடி அவரை பின்தொடர்ந்து சென்று மருத்துவமனை வளாகத்திலேயே அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளது. அது பிரசவ வார்டு என்பதால், ஏரளாமான பொதுமக்கள் அந்த பகுதியில் இருந்துள்ளனர். தொடர்ந்து, கொலை சம்பவத்தை நேரில் பார்த்து பதறிய அவர்கள் அலறியடித்து ஓடினர்.

முன்பகை காரணமா என்று விசாரணை:

உடனடியாக கீழ்பாக்கம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அவரை சிகிச்சை அனுமதித்துள்ளனர். எனினும், அவர் ஏற்கெனவே, உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, இந்த கொலைக்கு முன்விரோதம் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க : நெல்லையில் ஒரு விசித்திரம்…69 ஆண்டுகளாக வாயில் கல்லுடன் வாழும் முதியவர்…இதுதொடர்பாக அவர் கூறுவதென்ன!

ஹெல்மெட் அணிந்தபடி வந்து கொலை:

தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கொலையாளிகள் இருசக்கர வாகனம், ஆட்டோவில் வந்ததும், ஹெல்மெட் அணிந்தபடி மருத்துவமனைக்குள் வந்து கொலை செய்துவிட்டு, ஹெல்மெட் அணிந்தபடியே தப்பிச்சென்றதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் காலையிலேயே அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரவுடி கொலை செய்யப்பட்ட பெரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதியதாக வாகனம் வாங்குபவர்கள் RTO செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு..
எதிர் காலத்தை கணிக்கும் சீன கோயில்…அதுவும் இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா!
ஜனவரி 12ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் PSLV C62.. சிறப்புகள் என்ன?
ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!