Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வங்கக்கடலில் உருவானது சென்யார் புயல்.. தமிழகத்திற்கு பாதிப்பு இருக்குமா? வானிலை ரிப்போர்ட்.

Senyar Cyclone: வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த ‘சென்யார்’ புயல் அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு திசையில் நகர்ந்து இந்தோனேசிய கடலோர பகுதிகளில் இன்று கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் பெரிய தாக்கம் இருக்காது.

வங்கக்கடலில் உருவானது சென்யார் புயல்.. தமிழகத்திற்கு பாதிப்பு இருக்குமா? வானிலை ரிப்போர்ட்.
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 26 Nov 2025 09:58 AM IST

வானிலை நிலவரம், நவம்பர் 26, 2025: நவம்பர் 25 அன்று மலாக்கா ஜலசந்தி பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘சென்யார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று இந்தோனேசிய பகுதிகளை கடந்து அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக பலவீனப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. இந்த சூழலில், நேற்றைய தினம் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுவதற்கான சாத்தியம் மிக மிகக் குறைவு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

வங்கக்கடலில் உருவான சென்யார் புயல்:

ஆனால் 25 நவம்பர் 2025 நள்ளிரவு நேரத்தில் இது 10 கி.மீ வேகத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து, அதே பகுதியில் தற்போது ஒரு புயலாக உருவாகியுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: வீட்டுல ஒத்த ரூபாய் கூட இல்ல.. திருட வந்த வீட்டில் எதுவும் கிடைக்காததால் வீட்டின் உரிமையாளருக்கு கடிதம் எழுதிய திருடன்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த ‘சென்யார்’ புயல் அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு திசையில் நகர்ந்து இந்தோனேசிய கடலோர பகுதிகளில் இன்று கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு இது மேற்கு – தென்மேற்கு திசையில் முதலில் நகர்ந்து, பின்னர் தெற்கு திசையில் நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடலில் உருவான ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி:

மேலும், நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை ஒட்டி இலங்கை கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து அதே பகுதியில் காணப்படுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: எத்தனை நாட்கள் தமிழை வைத்து ஏமாற்றுவார்கள்? தோல்வி அடைந்த ஆட்சி திமுக ஆட்சி – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்..

குமரி கடல் பகுதிகளில் உருவாகியுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு – வடமேற்கு திசையில் நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தைப் பொறுத்தவரையில் வரக்கூடிய நாட்களில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதா? என்பதற்கு தற்போது வரை தெளிவில்லை. ஒருவேளை புயலாக வலுப்பெற்றால், வடக் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாமல் உள் தமிழகத்திலும் மழைப்பதிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.