தமிழகத்தில் 95.58% SIR படிவங்கள் விநியோகம்: தலைமை தேர்தல் ஆணையம் தகவல்!

பூர்த்தி செய்யப்பட்ட SIR படிவங்களை திரும்ப பெரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், படிவங்களை பெற்றுக்கொண்டதற்கா ஒப்புதல் சீட்டு ஒன்றையும் வாக்காளர்ளுக்கு வழங்குகின்றர். தொடர்ந்து, விண்ணப்பத்தில் பெறப்பட்ட அனைத்து விவரங்களையும் உடனடியாக இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய BLO மொபைல் செயலி மூலம் டிஜிட்டல் விடிவிலும் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் 95.58% SIR படிவங்கள் விநியோகம்: தலைமை தேர்தல் ஆணையம் தகவல்!

கோப்புப்படம்

Updated On: 

22 Nov 2025 08:31 AM

 IST

சென்னை, நவம்பர் 22: தமிழ்நாட்டில் இன்று வரை 6.12 கோடி பேருக்கு (95.58 சதவீதம்) வாக்காளர் பட்டியல் கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. பீகாரைத் தொடர்ந்து, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை முடிக்க ஒரு மாதம் மட்டுமே தேர்தல் ஆணையம் அவகாசம் வழங்கியுள்ளது. 7 கோடி மக்கள் தொதகை கொண்ட மாநிலத்தில் ஒரு மாதத்தில் இப்பணிகளை எப்படி அவசரகதியில் முடிக்க முடியும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும், அதனை பொருட்படுத்தாத தேர்தல் ஆணையம் வாக்காளர் சிறப்பு பட்டியல் திருத்தப் பணிகளை கடந்த நவ.4ம் தேதி தொடங்கி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

Also read: பிஎல்ஓக்களை திமுகவின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும்: அண்ணாமலை

களத்தில் அரசியல் கட்சியை சேர்ந்த 2.38 லட்சம் பேர்:

தொடர்ந்து, டிச.4ம் தேதிக்குள் இப்பணிகள் முடிக்கப்பட வேண்டும். இப்பணிகளில் தமிழகம் முழுவதும் 68,470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ) ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் முகவர்களாக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 2.38 லட்சம் பேர் களத்தில் உள்ளனர். அவர்களும் வீடு, வீடாக சென்று விண்ணப்பங்ககளை வழங்கி வருகிறார்கள். இன்னும் 12 நாட்களே மீதமுள்ள நிலையில், பிஎல்ஓக்கள் SIR படிவங்களை இரவு, பகலாக வார விடுமுறை உள்ளிட்ட எதையும் பொருட்படுத்தாது விநியோகித்து வருகின்றனர்.

பணிச்சுமையால் பிஎல்ஓ-க்கள் தற்கொலை:

இதனிடையே, தங்களது அன்றாட அலுவலக பணிகளுக்கு மத்தியில் கூடுதலாக வழங்கப்பட்டுள்ள இப்பணிகளால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவதாக பிஎல்ஓக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வருவாய்த்துறையினர் இப்பணிகளை முற்றிலும் புறக்கணித்துள்ளனர். அதேபோல், கேரளா மாநிலம் முழுவதும் பிஎல்ஓக்கள் SIR பணிகளை புறக்கணித்தனர். குறிப்பாக பல்வேறு மாநிலங்களிலும் பணிச்சுமை காரணமாக பிஎல்ஓக்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.

6.12 கோடி படிவங்கள் விநியோகம்:

எனினும், தேர்தல் ஆணையம் இதை எதையும் பொருட்படுத்தாது திட்டமிட்டபடி, SIR பணிகளை முடித்துவிட தீவிரமாக பணியாற்றி வருகிறது. தமிழகத்தில் கடந்த அக்.27ம் தேதி நிலவரப்படி மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது வரை தமிழகத்தில் 6.12 கோடி படிவங்கள், அதாவது 95.58% படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு விட்டதாக தகவல் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒருபக்கம் படிவகள் விநியோகிக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் நிரப்பிய படிவங்களை திரும்பப் பெறும் பணிகளும் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also read : தமிழகத்தில் 2 லட்சம் மாணவர்களுக்கு பார்வை குறைபாடு.. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

1.8 கோடி படிவங்கள் பதிவேற்றம்:

அதன்படி, தமிழகத்தில் 1.8 கோடி SIR படிவங்கள், அதாவது 28.81% படிவங்கள் திரும்ப பெறப்பட்டு இணையத்தில் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, அரசியல் கட்சிகள் சார்பில் ஒவ்வொரு வார்டிலும் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு விண்ணபங்களை பூர்த்தி செய்து வழங்குவதற்கு கட்சி நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். எவ்வளவு திட்டமிட்டு, வேகமாக இப்பணிகளை மேற்கொண்டாலும் மீதமுள்ள சில நாட்களில் SIR பணிகளை முடிப்பது கடினமானது என களத்தில் இருக்கும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories
மொபைல் போன் பயனாளர்களுக்கு மத்திய அரசின் கடும் எச்சரிக்கை!
நயன்தாராவின் பிறந்த நாளுக்கு ரூ.10 கோடி காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்
விஜய் தேவரகொண்டா பற்றி மறைமுகமாக பேசிய ரஷ்மிகா
கால்வாயில் சிக்கிக்கொண்ட குட்டி யானை - 3 நாட்கள் போராட்டத்துக்கு பிறகு பத்திரமாக மீட்பு