தமிழக மருத்துவக் கல்லூரியில் 50 எம்பிபிஎஸ் இடங்கள் குறைப்பு.. காரணம் என்ன?

PSP Medical College: பிஎஸ்பி மருத்துவக் கல்லூரியில் 50 எம்பிபிஎஸ் இடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணைய விதிமீறலே இதற்கான முக்கிய காரணம் என கூறப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 12,000 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிஎஸ்பி கல்லூரியில்தான் மட்டும் இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக மருத்துவக் கல்லூரியில் 50 எம்பிபிஎஸ் இடங்கள் குறைப்பு.. காரணம் என்ன?

ஒரகடம் பிஎஸ்பி மருத்துவக் கல்லூரி

Published: 

21 Jul 2025 09:20 AM

தமிழ்நாடு ஜூலை 21: தமிழகத்தில் (Tamilnadu) ஒரகடம் பிஎஸ்பி மருத்துவக் கல்லூரியில், கடந்த ஆண்டில் இருந்த 150 எம்பிபிஎஸ் இடங்களில் 50 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இது தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளை பின்பற்றாததினால் ஏற்பட்டது என கூறப்படுகிறது. முன்னதாக, இந்த கல்லூரி 250 இடங்களுக்கு உயர்வு கோரியிருந்தும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. நாடு முழுவதும் 766 கல்லூரிகளில் 1.15 லட்சம் இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 77 கல்லூரிகளுக்கு 12,000 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிஎஸ்பி கல்லூரியில்தான் மட்டும் இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் எம்சிசி அறிவிப்பு வெளியீடு

நாடு முழுவதும் உள்ள எம்பிபிஎஸ் (MBBS) இடங்களின் பட்டியலை மத்திய அரசின் மருத்துவக் கலந்தாய்வுக் குழு (MCC) சமீபத்தில் வெளியிட்டது. இந்த பட்டியலில், தமிழக காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் உள்ள பிஎஸ்பி (PSP) மருத்துவக் கல்லூரியில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 50 எம்பிபிஎஸ் இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

150 இடங்களில் இருந்து 100 இடங்களாக மாற்றம்

கடந்த கல்வியாண்டில் இந்தக் கல்லூரியில் 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இவ்வாண்டில் அந்த எண்ணிக்கை 100 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றாததனால் ஏற்பட்ட நடவடிக்கையாக கூறப்படுகிறது.

விரிவாக்க கோரிக்கைக்கு மறுப்பு, நிலுவையிலிருந்த இடமும் குறைப்பு

பிஎஸ்பி கல்லூரி, எம்பிபிஎஸ் இடங்களை 250-ஆக அதிகரிக்க தேசிய மருத்துவ ஆணையத்திடம் முன்பதாக விண்ணப்பித்திருந்தது. ஆனால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதோடு, ஏற்கனவே இருந்த இடங்களும் குறைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து மாணவர் சேர்க்கை பற்றிய அறிவுறுத்தல் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பியுள்ளது.

மொத்தமாக நாடு முழுவதும் 1.15 லட்சம் எம்பிபிஎஸ் இடங்கள்

2025 கல்வியாண்டில் நாடு முழுவதும் 766 மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமாக 1,15,900 எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஆந்திரா, சத்தீஸ்கர், தில்லி, குஜராத், கா்நாடகம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் 9 கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு முழுமையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 77 கல்லூரிகள் – 12,000 இடங்கள்

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், மதுரை எய்ம்ஸ், கோவை இஎஸ்ஐ ஆகியவற்றுடன் சேர்த்து மொத்தம் 77 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் மொத்தமாக 12,000 எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் அனுமதிக்கப்பட்ட இடங்களே அதிகமான கல்லூரிகளில் தொடர்ந்த நிலையில், பிஎஸ்பி கல்லூரியில்தான் மட்டும் 50 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.