பொங்கல் பரிசு ரொக்கம்… ரூ.3 ஆயிரமா அல்லது ரூ.4 ஆயிரமா? விரைவில் அறிவிப்பு!
2026 Pongal Gift When Will Be Delivered: பொங்கல் பண்டிகைக்கான பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் தேதி குறித்த அறிவிப்பை முதல்வர் மு. க. ஸ்டாலின் விரைவில் அறிவிக்க உள்ளார். இதில், ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை பரிசு வழங்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பச்சரிசி, வெள்ளம், கரும்பு துண்டு உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கமாகும். அதன்படி, இந்த ஆண்டும் பொங்கல் தொகுப்பு எப்போது வழங்கப்படும். அது தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு மக்களிடமும் எழுந்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு உள்ளிட்ட பொருள்களுடன் ரொக்க பணமும் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில், ரூ. 3000 முதல் 4000 வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் வேஷ்டி, சேலையும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு
இதற்காக தமிழகத்தில் சுமார் 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 2,22,91,700 கிலோ பச்சரிசி, சர்க்கரை ஆகியவை வழங்கப்பட உள்ளது. இதே போல, 1,77,22,000 வேஷ்டியும், 1,77,64,000 சேலையும் நெசவாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு நியாய விலை கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பொங்கள் பரிசு மற்றும் கரும்பு கொள்முதல் தொடர்பான அறிவிப்பு வெளியான பின்னர், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி தொடங்கப்படும்.
மேலும் படிக்க: சென்னை செண்ட்ரல் – விமான நிலையம் ரயில் சேவை ரத்து.. மாற்று வழி பயன்படுத்த மெட்ரோ ரயில் தரப்பில் அறிவுறுத்தல்..
இன்று அல்லது நாளை முதல்வர் அறிவிப்பார்
அந்த டோக்கனில், எந்தெந்த தேதிகளில் பொங்கல் பரிசு தொகுப்புகளை பெற்றுக் கொள்ளலாம் என்ற தகவல் இடம் பெற்றிருக்கும். அதன் அடிப்படையில் ரேஷன் அட்டைதாரர்கள் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான அறிவிப்புகளை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று (டிசம்பர் 30) அல்லது நாளை (டிசம்பர் 31) அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2022 முதல் 2024 வரை
கடந்த 2021- ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2022- ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, முந்திரி, திராட்சை, வெள்ளம் உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதே போல, கடந்த 2023- ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ரூ. ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட்டது.
ரூ.ஆயிரத்துடன் பரிசு தொகுப்பு
கடந்த 2024- ஆம் ஆண்டில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டன. ரூ. ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஆங்கில புத்தாண்டுக்கு பொதுமக்கள் ஈஸியா ஊருக்கு செல்லலாம்…TNSTC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!