England Cricket Team: வரலாறு படைத்த இங்கிலாந்து: அயர்லாந்து தொடருக்கு எதிராக 21 வயது இளம் கேப்டன் நியமிப்பு!
Youngest Ever England Captain: இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தென்னாப்பிரிக்கா மற்றும் அயர்லாந்துக்கு எதிரான தொடர்களுக்கான அணிகளை அறிவித்துள்ளது. 21 வயதான ஜேக்கப் பெத்தேல் அயர்லாந்து தொடருக்கான கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இது இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணம்.

இந்திய அணிக்கு (Indian Cricket Team) எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அடுத்து நடைபெறும் 2 முக்கியமான தொடர்களுக்கான அணிகளை அறிவித்துள்ளது. இதனுடன், ஒரு வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட் உலகை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. வரவிருக்கும் தொடருக்கு இங்கிலாந்து அணியின் (England Cricket Team) புதிய கேப்டனாக வெறும் 21 வயதான இளம் வீரரை அறிவித்துள்ளது. அதன்படி, அயர்லாந்து எதிரான தொடருக்கு இங்கிலாந்து அணிக்கு 21 வயது இளம் வீரர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த வீரர் வேறு யாருமல்ல, (Jacob Bethell) ஜேக்கப் பெத்தேல்தான்.
ALSO READ: ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருடன் கோலி, ரோஹித் ஓய்வா..? பிசிசிஐ முடிவு இதுதான்!




தென்னாப்பிரிக்கா எதிரான தொடர்:
இங்கிலாந்து அணி வருகின்ற 2025 செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவை சொந்த மண்ணில் எதிர்கொள்ளும். இரு நாடுகளுக்கும் இடையே 2025 செப்டம்பர் 2 முதல் 15 வரை 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் நடைபெறும். ஹாரி புரூக் தலைமையிலான இந்தத் தொடருக்கான முழு பலத்துடன் கூடிய அணியை இங்கிலாந்து களமிறக்கியுள்ளது. ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜோஸ் பட்லர், ஜோ ரூட் மற்றும் பென் டக்கெட் போன்ற பெரிய வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அயர்லாந்து அணிக்கு எதிரான இங்கிலாந்து அணி:
History maker! 💥
Jacob Bethell is set to become our youngest ever England Men’s captain against Ireland 👏
Congrats, Beth! pic.twitter.com/tcR4b0dB0D
— England Cricket (@englandcricket) August 15, 2025
டப்ளினில் பெத்தேல் அணியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டவுடன், இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் வரலாற்றில் இளைய சர்வதேச கேப்டன் என்ற பொறுப்பை ஜேக்கப் பெத்தேல் பெறுவார். இதன்மூலம், இளம் வீரர்கள் மீது இங்கிலாந்து அணி எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளது என்பது தெளிவாகிறது.
இந்த முடிவு குறித்து தனது கருத்தைத் தெரிவித்த இங்கிலாந்து அணியின் தேர்வாளர் லூக் ரைட், “ஜேக்கப் பெத்தேல் இதுவரை தனது அற்புதமான தலைமைத்துவத் திறன்களால் அனைவரையும் கவர்ந்துள்ளார். அயர்லாந்து தொடர் அவருக்கு தன்னை நிரூபிக்கவும், சர்வதேச அரங்கில் தனது திறமைகளை மேலும் மெருகேற்றவும் ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்” என்றார்.
ALSO READ: ஆசிய கோப்பை இந்திய அணி.. ரிஷப் பண்ட் இடம் பெறமாட்டாரா?
இங்கிலாந்து அணிகள்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் அணி
ஹாரி ப்ரூக் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், சோனி பேக்கர், டாம் பான்டன், ஜேக்கப் பெத்தேல், ஜோஸ் பட்லர், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், சாகிப் மஹ்மூத், ஜேமி ஓவர்டன், அடில் ரஷீத், ஜோ ரூட், ஜேமி ஸ்மித்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 அணி
ஹாரி புரூக் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், டாம் பான்டன், ஜேக்கப் பெத்தேல், ஜோஸ் பட்லர், பிரைடன் கார்ஸ், லியாம் டாசன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், சாகிப் மஹ்மூத், ஜேமி ஓவர்டன், அடில் ரஷித், பில் சால்ட், ஜேமி ஸ்மித், லூக் வுட்.
அயர்லாந்து தொடர் டி20 அணி
ஜேக்கப் பெத்தேல் (கேப்டன்), ரெஹான் அகமது, சோனி பேக்கர், டாம் பான்டன், ஜோஸ் பட்லர், லியாம் டாசன், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், சாகிப் மஹ்மூத், ஜேமி ஓவர்டன், மேத்யூ பாட்ஸ், அடில் ரஷீத், பில் சால்ட், லூக் வுட்.