Aiden Markram’s Lord’s Century: லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் சதம்.. வரலாற்று சாதனை படைத்த ஐடன் மார்க்ரம்..!

WTC Final 2025: லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்காவின் ஐடன் மார்க்ரம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்து வரலாறு படைத்தார். இது ICC இறுதிப் போட்டியில் சதம் அடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் என்ற பெருமையை அவருக்குப் பெற்றுத் தந்தது. டெம்பா பவுமாவின் அசாத்திய ஆட்டமும் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு கிட்டத்தட்ட உதவியுள்ளது.

Aiden Markrams Lords Century: லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் சதம்.. வரலாற்று சாதனை படைத்த ஐடன் மார்க்ரம்..!

ஐடன் மார்க்ரம்

Published: 

14 Jun 2025 10:51 AM

லார்ட்ஸில் நடைபெற்று வரும் 2025 உலக டெஸ் சாம்பியன்ஷிப் (WTC Final 2025)
இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்க தொடக்க வீரர் ஐடன் மார்க்ரம் (Aiden Markram) சிறப்பாக விளையாடி சதம் அடித்து வரலாறு படைத்தார். போட்டியின் 3வது நாளான நேற்று அதாவது 2025 ஜூன் 13ம் தேதி மார்க்ரம் சதத்தை நிறைவு செய்தது மட்டுமின்றி, தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றிக்காகவும் போராடி வருகிறார். இதனுடன் கேப்டன் டெம்பா பவுமாவும் (Temba Bavuma) 65 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் விளையாடி வருகிறார். ஐடன் மார்க்ரம் சதம் அடித்ததன்மூலம், இதுவரை எந்த தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேனும் செய்ய முடியாத ஒரு பெரிய சாதனையையும் படைத்துள்ளார்.

முதல் தென்னாப்பிரிக்கா வீரர்:

ஐசிசி இறுதிப் போட்டியில் சதம் அடித்த முதல் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் என்ற சாதனையை ஐடன் மார்க்ரம் படைத்தார். இதற்கு முன்பு, ஐசிசி இறுதிப் போட்டியில் சதம் அடித்த சாதனையை எந்த தென்னாப்பிரிக்க வீரரும் படைத்ததில்லை. இதுதவிர, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரலாற்றில் சதம் அடித்த 3வது பேட்ஸ்மேன் என்ற சாதனையும் மார்க்ரம் படைத்தார். இவருக்கு முன்பு, ஸ்டீவ் ஸ்மித் (121) மற்றும் டிராவிஸ் ஹெட் (121) ஆகியோர் 2023 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்திருந்தனர்.

பிராட்மேன் கிளப்பில் இணைந்த ஐடன் மார்க்ரம்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லாட்ர்ஸில் தென்னாப்பிரிக்க வீரர் ஐடன் மார்க்ரம் சதம் அடித்ததன்மூலம், டான் பிராட்மேனின் கிளப்பில் இணைந்தார். அதாவது, லார்ட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் பிராட்மேன் ஆவார். டான் பிராட்மேன் கடந்த 1938ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதன்பிறகு ராய் ஃபிரடெரிக்ஸ், கார்டன் கிரீனிட்ஜ், அஜித் அகர்கர் மற்றும் மைக்கேல் கிளார்க் ஆகியோர் லார்ட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் சதம் அடித்த வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் ஆவர்.

4வது இன்னிங்ஸில் சதம்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சதம் அடித்ததன்மூலம், முன்னாள் தென்னாப்பிரிக்கா கேப்டன் கிரேம் ஸ்மித்தின் சாதனையையும் சமன் செய்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்காவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டின் 4வது இன்னிங்ஸில் 1க்கு மேற்பட்ட சதங்களை அடித்த 2வது தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார். கிரேம் ஸ்மித் மற்றும் மார்க்ரம் இதை 2முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்த சாதனையை செய்துள்ளனர்.

Related Stories
India vs England Test Series 2025: முதல் டெஸ்டில் முத்திரை பதிக்குமா சுப்மன் படை.. ஹெடிங்லி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்திய அணியின் சாதனை என்ன..?
ICC Cricket Rule Changes 2025: சர்வதேச போட்டிகளில் மாறப்போகும் விதிகள்.. எப்போது முதல் அமலுக்கு வருகிறது தெரியுமா..?
WTC Prize Money: சாம்பியன் தென்னாப்பிரிக்காவுக்கு இவ்வளவு கோடியா..? இந்தியாவுக்கும் பரிசுத்தொகை! ஏன் தெரியுமா?
New Catch Rule in Cricket: பவுண்டரி எல்லை கேட்சில் புதிய மாற்றம்.. சூர்யகுமார் யாதவ் கேட்ச் சட்டவிரோதமானதா..? 
South Africa Wins WTC Final 2025: 27 ஆண்டுகளுக்கு பிறகு! ஐசிசி டிராபியை கையில் ஏந்திய தென்னாப்பிரிக்கா.. ரசிகர்கள் உற்சாகம்!
Air India Crash: இனி ஒருபோதும் ஏர் இந்தியாவில் பயணிக்க மாட்டேன்.. ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்த வார்னர்!