AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

WTC Final – திடீரென இந்தியா திரும்பிய கவுதம் காம்பீர் – காரணம் என்ன?

Gautam Gambhir Returns Home : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து போட்டிகள் வருகிற ஜூன் 20, 2025 அன்று துவங்கவிருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் குடும்ப சூழ்நிலை காரணமாக இந்தியா திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

WTC Final – திடீரென இந்தியா திரும்பிய கவுதம் காம்பீர்  – காரணம் என்ன?
கௌதம் காம்பீர்
Karthikeyan S
Karthikeyan S | Published: 13 Jun 2025 16:33 PM IST

இங்கிலாந்தில் (England) நடைபெறவுள்ள இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாகவே, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கவுதம் கம்பீர் (Gautam Gambhir) இந்தியா திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship) போட்டியை முன்னிட்டு இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 20, 2025 அன்று தொடங்கவிருக்கிறது. இதற்கு முன்பாக, இந்தியா ‘ஏ’ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கிடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெறவிருக்கிறது. இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து கண்காணிக்க இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தப் போட்டிகள் குறித்து முடிவெடுக்க இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், வீரர்கள் பயணம் செய்யும் முன்பாகவே இங்கிலாந்துக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவுதம் காம்பிர் இந்தியா திரும்பவதற்கான காரணம் ?

இந்த நிலையில் ஜூன் 13, 2025 அன்று நடைபெறவிருந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தயாராகி வரும் வேளையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திப்படி, குடும்ப சூழ்நிலை காரணமாக கவுதம் காம்பீர் அவசரமாக இந்தியா திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அது என்ன காரணம் என்பது குறித்து இதுவரை தகவல் வெளியிடப்படவில்லை. இதற்கு முன்பும், பார்டர் கவாஸ்கர் டிராபி போட்டியின் போது கூட கம்பீர் குடும்பச் சூழ்நிலையால் ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா திரும்பும் கவுதம் காம்பீர்

 

அவருக்கு பதிலாக யார் பொறுப்பு வகிக்கிறார்?

கம்பீர் இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பியதால், intra-squad போட்டியின் நேரடி பொறுப்பை இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் ரியான் டென் ட்ஸ்சேட் ( Ryan ten Doeschate ) மேற்கொள்கிறார். அவருடன் பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மார்கல், பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்ஷு கோட்டக் ஆகியோர் செயல்படவிருக்கின்றனர். மேலும் கவுதம் காம்பீர் மீண்டும் ஒரு வாரத்துக்கு பிறகு ஜூன் 20, 2025க்கு முன்னதாக இங்கிலாந்து திரும்ப சென்று இந்திய அணியுடன் இணையவிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்தியா அணி விவரம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி ஜூன் 20, 2025 அன்றும் ஹெடிங்லி மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட விருக்கிறது. இந்த போட்டிகள் வரும் ஆகஸ்ட், 2025 வரை நடைபெறவிருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்ற நிலையில் இளம் வீரர்கள் கொண்ட அணியாக களமிறங்கவிருக்கிறது. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும் துணை கேப்டனாக ரிஷப் பண்ட்டும் செயல்படவிருக்கிறார்கள். மேலும், யஷஸ்வி ஜெய்ச்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, த்ருவ் ஜுரேல், வாஷிங்டன் சுந்தர், ஷார்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), சோயப் பஷீர், ஜேக்கப் பெதல், ஹாரி ப்ரூக், பிரைடன் கார்ஸ், சாம் குக், ஸாக் கிராஊலி, பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஒல்லி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), ஜோஷ் டங், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் பங்கேற்கவிருக்கின்றனர்.

Follow Us