Winter Olympics 2026: பிரமாண்டமாக தொடங்கும் 2026 குளிர்கால ஒலிம்பிக்.. இந்தியாவில் எங்கே, எப்படி காணலாம்? A-Z விவரங்கள் இதோ!
Winter Olympics 2026 Opening Ceremony: 2026 மிலன்-கோர்டினா குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா நாளை அதாவது 2026 பிப்ரவரி 6ம் தேதி நடைபெறுகிறது. உள்ளூர் இத்தாலிய நேரப்படி (CET) இரவு 8:00 மணிக்கும், இந்திய நேரப்படி 2026 பிப்ரவரி 7ம் தேதி அதிகாலை 1:30 மணிக்குத் தொடங்கும்.

குளிர்கால ஒலிம்பில் 2026
2026 மிலன் கோர்டினா குளிர்கால ஒலிம்பிக் (Winter Olympics 2026) எப்போது தொடங்கும் என்ற மிகப்பெரிய எதிர்பார்க்கும் மத்தியில், காத்திருப்பு முடிவுக்கு வர உள்ளது. 2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டியை மிலன் மற்றும் கோர்டினா என 2 இத்தியாலிய நகரங்கள் கூட்டாக முதல் முறையாக நடத்த இருக்கின்றன. இதில், சுமார் 2,900 விளையாட்டு வீரர்கள் 16 விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இருக்கின்றனர். அதன்படி, இந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் பிரமாண்ட தொடக்க விழாவுடன் நடைபெறவுள்ளது. அதன்படி, 5 முறை கிராமி விருது (Grammy Award) வென்ற மரியா கேரி, கோல்டன் குளோப் விருது வென்ற லாரா பௌசினி மற்றும் இத்தாலியின் புகழ்பெற்ற ஆண்ட்ரியா போசெல்லி போன்ற கலைஞர்கள் 2026 குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் கலக்க இருக்கின்றனர்.
ALSO READ: ஒலிம்பிக் தரத்திலான ரெஸ்ட்லிங் போட்டிகள் – எதில் பார்க்கலாம்?
திறப்பு விழா தேதி மற்றும் நேரம்:
Passion. Beauty. Unmistakable style. ✨
The #WinterOlympics are taking over Italy from February 6-22. 🇮🇹❤️#MilanoCortina2026 #Olympics pic.twitter.com/MyPXwxJt5w
— The Olympic Games (@Olympics) January 6, 2026
2026 மிலன்-கோர்டினா குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா நாளை அதாவது 2026 பிப்ரவரி 6ம் தேதி நடைபெறுகிறது. உள்ளூர் இத்தாலிய நேரப்படி (CET) இரவு 8:00 மணிக்கும், இந்திய நேரப்படி 2026 பிப்ரவரி 7ம் தேதி அதிகாலை 1:30 மணிக்குத் தொடங்கும். உலகளவில் நேரடி பார்வையாளர்களை அனுமதிக்கும் வகையில் இந்த நேரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விழா தோராயமாக 3 மணி நேரம் நீடிக்கும்.
2026 குளிர்கால ஒலிம்பிக் எப்போது நடைபெறும்?
2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 2026 பிப்ரவரி 6 முதல் 2026 பிப்ரவரி 22 வரை நடைபெறும்.
தொடக்க விழா எங்கு நடைபெறுகிறது..?
2026 மிலன்-கோர்டினா குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா மிலனின் புகழ்பெற்ற சான் சிரோ மைதானத்தில் நடைபெறும். கால்பந்திற்கு பெயர் பெற்ற இந்த மைதானம், தற்போது ஒலிம்பிக்கிற்கு தயாராக உள்ளது. 60,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள். ஒலிம்பிக் வரலாற்றில் முதல்முறையாக, தொடக்க விழா ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் நடைபெறும், ஆனால் முக்கிய நிகழ்வு சான் சிரோவில் நடைபெறும்.
2026 குளிர்கால ஒலிம்பிக்கில் எத்தனை விளையாட்டு இடம்பெற்றுள்ளன..?
2026 குளிர்கால ஒலிம்பிக்கில் 16 பிரிவுகள் மற்றும் 116 போட்டிகள் அடங்கிய எட்டு விளையாட்டுகள் இடம்பெறும். எந்த வருடமும் இல்லாமல், 2026ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக்கில் வான மலையேறுதல் போட்டி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ALSO READ: வீரர் முதல் பிராண்ட் தூதர் வரை.. டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா கடந்து வந்த பாதை!
இந்தியாவில் 2026 குளிர்கால ஒலிம்பிக்கை எங்கே பார்க்கலாம்..?
இந்தியாவில், 2026 குளிர்கால ஒலிம்பிக் தொடக்க விழா மற்றும் நிகழ்வுகளை ஜியோ சினிமாவில் நேரடியாகப் பார்க்கலாம். இந்தியாவில் விளையாட்டுகளுக்கான அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு உரிமையை வியாகாம் 18 பெற்றுள்ளது.