T20 World Cup 2028: 2028 டி20 உலகக் கோப்பை எப்போது தொடங்குகிறது? எங்கு நடைபெறுகிறது?

T20 World Cup 2028 Details: 11வது ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் 2028 ஆம் ஆண்டு நடைபெறும். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து அக்டோபர் 21 முதல் நவம்பர் 19, 2028 வரை நடத்தும். அதன்படி, 2022ம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியா இரண்டாவது முறையாக இந்தப் போட்டியை நடத்த இருக்கிறது.

T20 World Cup 2028: 2028 டி20 உலகக் கோப்பை எப்போது தொடங்குகிறது? எங்கு நடைபெறுகிறது?

2028 டி20 உலகக் கோப்பை

Published: 

14 Mar 2026 08:00 AM

 IST

இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026ஐ வென்று சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி (Indian Cricket Team) 3வது முறையாக உலக சாம்பியனாகியுள்ளது. 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்திய வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு பிறகு, உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இப்போது 2028 டி20 உலகக் கோப்பை எப்போது நடைபெறும் என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்தவகையில், 2028 டி20 உலகக் கோப்பை எப்போது, எங்கு நடைபெறும் உள்ளிட்ட விவரங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

ALSO READ: இந்திய அணியின் அடுத்த சர்வதேச போட்டி எப்போது..? எந்த அணிக்கு எதிராக விளையாடும்?

2028 டி20 உலகக் கோப்பை எப்போது, எங்கு நடைபெறுகிறது..?

11வது ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் 2028 ஆம் ஆண்டு நடைபெறும். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து அக்டோபர் 21 முதல் நவம்பர் 19, 2028 வரை நடத்தும். அதன்படி, 2022ம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியா இரண்டாவது முறையாக இந்தப் போட்டியை நடத்த இருக்கிறது. அதே நேரத்தில், நியூசிலாந்து தனது முதல் ஆண்கள் டி20 உலகக் கோப்பையை நடத்த இருக்கிறது.

2028 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள மிகவும் மதிப்புமிக்க கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறும். அதன்படி, ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் (MCG), சிட்னி கிரிக்கெட் மைதானம் (SCG), அடிலெய்டு ஓவல் மற்றும் பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்திலும், நியூசிலாந்தில் ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க், வெலிங்டனில் உள்ள ஸ்கை ஸ்டேடியம் மற்றும் கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் ஸ்டேடியங்களிலும் நடைபெறவுள்ளது.

மீண்டும் 20 அணிகள் பங்கேற்பு:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்ட 20 அணிகள் பங்கேற்கும் முறையை மீண்டும் அமல்படுத்தப்பட இருக்கிறது. 2026 டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்று முடிந்தவுடன், 12 அணிகள் வெளியேறும். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஏற்கனவே போட்டியை நடத்தும் நாடுகளாக உள்ளே வரும். அதே நேரத்தில் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே ஆகியவை 2026 டி20 உலகக் கோப்பையில் தங்கள் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு தகுதி பெறும்.

தரவரிசை அடிப்படையில் அணிகள் தகுதி பெறும்:

2026 மார்ச் 9ம் தேதி ஐசிசி டி20 தரவரிசையில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் தங்கள் இடங்களைப் பிடித்துள்ளன. மீதமுள்ள எட்டு இடங்களுக்கான தேர்வுகள் இனிமேல் தொடங்க உள்ளன. இவற்றுக்கான பிராந்திய தகுதிப் போட்டிகள் 2026ம் ஆண்டின் நடுப்பகுதியில் தொடங்கும். துணை பிராந்திய தகுதிப் போட்டிகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற பிராந்தியங்களில் நடத்தப்படும். இதனால் இணை நாடுகள் தகுதி பெற வாய்ப்புள்ளது.

ALSO READ: 2027 ஒருநாள் உலகக் கோப்பையை குறிவைக்கும் பிசிசிஐ.. பக்கா ப்ளானுடன் களமிறங்கும் ரோஹித், கோலி!

2028 டி20 உலகக் கோப்பை எப்படி நடைபெறும்..?

  • லீக் ஸ்டேஜ் – இந்தப் போட்டியில் 20 அணிகள் இடம்பெறும். ஒவ்வொன்றும் 5 அணிகள் கொண்ட 4 குழுக்களாகப் பிரிக்கப்படும்.
  • சூப்பர் 8 – ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
  • நாக் அவுட் – சூப்பர் 8 இலிருந்து நான்கு சிறந்த அணிகள் அரையிறுதியிலும் பின்னர் இரண்டு இறுதிப் போட்டிகளிலும் போட்டியிடும்.
Follow Us
அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜின் படத்துக்கு அனிருத்தின் சம்பளம் இவ்வளவா?
பிரபாஸ் மற்றும் எகோ பட இயக்குநர் சந்திப்பு
தன்னை தாக்க வந்த சிறுத்தையை கற்களால் அடித்து கொன்ற 18 வயது இளைஞர்..
வாடிக்கையாளரை தாக்கிய ப்ளிங்கிட் ஏஜெண்ட்.. நடந்தது என்ன?