T20 World Cup Semi-Finals: விரைவில் டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி.. மழை பெய்தால் யாருக்கு சாதகம்..? விதிகள் கூறுவது என்ன?
T20 World Cup Semi Final Rain Rules: 2026 மார்ச் 5ம் தேதி மழை காரணமாக இந்தியா-இங்கிலாந்து அரையிறுதிப் போட்டி ரத்து செய்யப்பட்டால், ரிசர்வ் டே விதி அமல் படுத்தப்படும். அதாவது அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு ரிசர்வ் டே ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, வருகின்ற 2026 மார்ச் 5ம் தேதி இந்தியா-இங்கிலாந்து போட்டியை நடத்த முடியாவிட்டால், அது 2026 மார்ச் 6ம் தேதிக்கு மாற்றியமைக்கப்படும்.

அரையிறுதி போட்டிகள்
2026 டி20 உலகக் கோப்பையில் (2026 T20 World Cup) லீக் ஸ்டேஜ் மற்றும் சூப்பர் 8 சுற்றுகள் முடிந்து தற்போது 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. அரையிறுதி போட்டியில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. முதல் அரையிறுதி போட்டியானது வருகின்ற 2026ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி கொல்கத்தாவில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடைபெறும். இதனை தொடர்ந்து, வருகின்ற 2026ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 2வது அரையிறுதியில் இந்தியாவும் (Indian Cricket Team) இங்கிலாந்தும் மோதுகின்றன. இந்தநிலையில், அரையிறுதி போட்டிகளில் மழை பெய்தால் ஐசிசி விதிகள் கூறுவது என்ன..? யாருக்கு சாதகம் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.
2026 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிப் போட்டிகள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டியின் போது மழை பெய்தாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் போட்டிகள் ரத்து செய்யப்பட்டாலோ, இறுதிப் போட்டியாளர்கள் தேர்ந்தெடுப்பது கடினமாகி விடும்.
ALSO READ: அரையிறுதியில் இந்திய அணி.. டி20 உலகக் கோப்பையில் வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
அரையிறுதியில் மழை பெய்தால், விதிகள் என்ன?
𝐀𝐧𝐝 𝐭𝐡𝐞𝐧 𝐭𝐡𝐞𝐫𝐞 𝐰𝐞𝐫𝐞 𝐟𝐨𝐮𝐫 🤩
The #T20WorldCup 2026 semi-finals are locked 🔒
More details➡️ https://t.co/0UKXfuke7c pic.twitter.com/IxJeZvr5M3
— ICC (@ICC) March 1, 2026
2026 மார்ச் 5ம் தேதி மழை காரணமாக இந்தியா-இங்கிலாந்து அரையிறுதிப் போட்டி ரத்து செய்யப்பட்டால், ரிசர்வ் டே விதி அமல் படுத்தப்படும். அதாவது அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு ரிசர்வ் டே ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, வருகின்ற 2026 மார்ச் 5ம் தேதி இந்தியா-இங்கிலாந்து போட்டியை நடத்த முடியாவிட்டால், அது 2026 மார்ச் 6ம் தேதிக்கு மாற்றியமைக்கப்படும்.
ரிசர்வ் டேவில் ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் போட்டி யாருக்கு சாதகம்?
அறிவிக்கப்பட்ட ரிசர்வ் டேவிலும் போட்டி முழுமையாக நடைபெறவில்லை என்றால், சூப்பர் 8 சுற்றின் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை இடத்தைப் பிடித்த அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். அதாவது, இரண்டு அரையிறுதிப் போட்டிகளும் ரிசர்வ் நாளில் நடைபெறவில்லை என்றால், தென்னாப்பிரிக்காவும் இங்கிலாந்தும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
ALSO READ: டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி போட்டிகள் எப்போது தொடக்கம்? இந்திய அணியின் போட்டி விவரம் இதோ!
அரையிறுதி அட்டவணை?
2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் அரையிறுதிப் போட்டி வருகின்ற 2026 மார்ச் 5ம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும். இந்தப் போட்டி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும். அதற்கு முன், முதல் அரையிறுதி போட்டி வருகின்ற 2026 மார்ச் 4 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் தென்னாப்பிரிக்காவை நியூசிலாந்து எதிர்கொள்ளும். இந்த போட்டிகள் அனைத்து மாலை 6.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு இரவு 7 மணிக்கு தொடங்கும்.