Virat Kohli: கிரிக்கெட் வாழ்க்கை ஓவரா? – விராட் கோலி கொடுத்த தரமான பதிலடி!

நீண்ட மாதங்களுக்குப் பின் ரோகித் சர்மாவும், கோலியும் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்குத் திரும்புகின்றனர். இப்படியான நிலையில் சமூக வலைத்தளத்தில் விராட் கோலி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நீங்கள் விட்டுக்கொடுக்க முடிவு செய்யும் போது மட்டுமே தோல்வி என்பது ஏற்படும் என அவர் பதிவிட்டுள்ளார்.

Virat Kohli: கிரிக்கெட் வாழ்க்கை ஓவரா? - விராட் கோலி கொடுத்த தரமான பதிலடி!

விராட் கோலி

Updated On: 

16 Oct 2025 12:03 PM

 IST

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தன்னை சுற்றி பரவி வரும் வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைக்குப் பின் இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அடுத்தடுத்து அறிவித்தனர். தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தும் இவர்கள் 2027 ஆம் ஆண்டு நடக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை வரை விளையாடுவார்கள் என சொல்லப்படுகிறது. இருந்தும் இருவரின் ஓய்வு குறித்தும் தகவல்கள் பரவி வருகிறது.

எனினும் 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இருவரும் எந்தவொரு  ஒருநாள் போட்டிகளிலும் களமிறங்கவில்லை. இந்த நிலையில் இந்திய ஒருநாள் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு  மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளது.

Also Read:  இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்..? அறிமுகமாகாத இளம் வீரரை கைகாட்டிய இங்கிலாந்து வீரர்!

விராட் கோலி வெளியிட்ட பதிவு

முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 19ம் தேதி பெர்த் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் விராட் கோலி சமூக வலைத்தளமாக எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அதில், “நீங்கள் உண்மையிலேயே தோல்வியடைவது, நீங்கள் விட்டுக்கொடுக்க முடிவு செய்யும் போது மட்டுமே நடக்கும்” என அவர் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பெரிதும் ஆர்வம் காட்டாத விராட் கோலி எப்போவாதது தான் தனிப்பட்ட அப்டேட்டுகளை பகிர்ந்து கொள்வார்.

அப்படியான நிலையில் அவரின் இந்த பதிவு ஒருநாள் போட்டி எதிர்காலம் குறித்தும், குறிப்பாக 2027 உலகக் கோப்பை நெருங்கி வருவதால் அதுதொடர்பாக வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாகவும் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read:   இந்திய அணிக்காக இதை விராட் கோலி தியாகம் செய்தார்.. ஓபனாக பேசிய ஆரோன் பின்ச்..!

அக்டோபர் 19ஆம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்காக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ளனர். இருவரும் மீண்டும் அணிக்கு திரும்பியது குறித்து பேசிய தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு, இருவரும் ஆஸ்திரேலியாவில் நல்ல நேரம் போகட்டும் என்று நகைச்சுவையாக வாழ்த்தினார்.

மேலும் 2027 உலகக் கோப்பைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில், நிகழ்காலத்தில் கவனம் செலுத்துவது முக்கியமாகும். இதில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் விதிவிலக்கான வீரர்கள் இல்லை. எனினும் அவர்களின் வருகை ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும். அவர்கள் ஒரு வெற்றிகரமான சுற்றுப்பயணத்தை மேற்கொள்வார்கள் என்று நம்புகிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.