Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Virat Kohli: இந்திய அணிக்காக இதை விராட் கோலி தியாகம் செய்தார்.. ஓபனாக பேசிய ஆரோன் பின்ச்..!

Virat Kohli Test cricket: விராட் கோலியின் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. அவரது தலைமையின் கீழ் இந்தியா சிறப்பான வெற்றிகளைப் பெற்றது. ஆஸ்திரேலியாவில் வரலாற்றுச் சாதனை வெற்றிகள் அவரது திறமையைப் பிரதிபலிக்கின்றன. ஆரோன் பின்ச், கோலியின் தலைமைத்துவத்தைப் பாராட்டியுள்ளார்.

Virat Kohli: இந்திய அணிக்காக இதை விராட் கோலி தியாகம் செய்தார்.. ஓபனாக பேசிய ஆரோன் பின்ச்..!
ஆரோன் பின்ச் - விராட் கோலிImage Source: Twitter
mukesh-kannan
Mukesh Kannan | Published: 18 May 2025 16:59 PM

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா (Rohit Sharma) ஓய்வு பெற்றதை தொடர்ந்து, நட்சத்திர வீரர் விராட் கோலியும் (Virat Kohli) டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. விராட் கோலி இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்தபோது, அது பொற்காலம் என்றே சொல்லலாம். விராட் கோலி தலைமையில் இந்தியா இதுவரை கண்டிராத சில சாதனைகளை படைத்தது. மேலும், வெளிநாட்டு மண்ணில் ஆதிக்கம் செலுத்தியது. விராட் கோலியின் டெஸ்ட் ஓய்வு குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச்சும் தன் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

என்ன சொன்னார் ஆரோன் பின்ச்..?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான நேற்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. இந்த போட்டிக்கு முன்னதாக ஜியோஸ்டாரில் பேசிய ஆரோன் பின்ச், “விராட் கோலியின் தலைமைத்துவத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்னவென்றால், அவரது புள்ளிவிவரங்களை இப்போது பார்த்து அவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அளவுக்கு சிறந்தவர் அல்ல என்று சொல்லலாம். ஆனால், விராட் கோலி இந்தியாவில் சில பிட்ச்களில் விளையாடி கொண்டிருந்தார். அவை முதல் நாளிலிருந்தே நிறைய சுழன்று கொண்டிருந்தன. இது விராட் கோலி ரன்களை எடுக்கவும் சிரமத்தை கொடுத்தது. அப்போது விராட் கோலி நினைத்திருந்தால் சில பிளாட் பிட்சுகளை வைத்திருக்கலாம்.

அந்தநேரத்தில் விராட் கோலி, நான் எனக்கு தேவையான ரன்களை விரட்டி எனது சாதனையை எல்லா காலத்திலும் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிருக்கலாம் என்று கூறியிருக்கலாம். ஆனால், அப்போது, கோலி தனது ஈகோவை ஒதுக்கி வைத்துவிட்டு எனது அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று தெரிவித்து சுழற்பந்து வீச்சாளர்களுக்கு தேவையான பிட்சை வைக்க சொன்னார்” என்று தெரிவித்தார்.

கேப்டனாக டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி எப்படி..?

இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி உள்ளார். கோலி தலைமையில் இந்திய அணி இதுவரை 68 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 40 வெற்றிகளையும், 17 தோல்விகளையும் சந்தித்துள்ளது. அதேபோல், 11 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. இந்தியா மண்ணில் விராட் கோலி இதுவரை 31 டெஸ்ட் போட்டிகளில் 24 போட்டிகளில் வென்றுள்ளது.

வெளிநாட்டு மண்ணில் விராட் கோலி இதுவரை 36 போட்டிகளில் டெஸ்ட் அணிக்கு தலைமை தாங்கியுள்ளார். அதில், 16 போட்டிகளில் வெற்றியையும் தேடி தந்துள்ளார். இதன்மூலம், சவுரவ் கங்குலியின் முந்தைய 11 வெளிநாட்டு டெஸ்ட் வெற்றிகளின் சாதனையை முறியடித்தார். இதில், விராட் கோலி தலைமையில் இந்திய அணி 2018–19 மற்றும் 2020–21 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் வரலாற்று தொடர் வெற்றிகளும், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவில் மறக்கமுடியாத டெஸ்ட் வெற்றிகளையும் பெற்று தந்தார்.

கோலியின் சர்வதேச டெஸ்ட் வாழ்க்கை:

விராட் கோலி இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 30 சதங்கள், 31 அரைசதங்களுடன் 9,230 ரன்கள் எடுத்துள்ளார். கோலி 1027 பவுண்டரிகளையும் 30 சிக்ஸர்களையும் அடித்துள்ளார்.

தோனியை சீண்டும் கோலி ரசிகர்கள்! திரும்பி அடிக்கும் தோனி ரசிகர்கள்
தோனியை சீண்டும் கோலி ரசிகர்கள்! திரும்பி அடிக்கும் தோனி ரசிகர்கள்...
ஊட்டச்சத்து குறைபாடு அறிகுறிகள் இவைதான்.. உடனே உஷாராகுங்க!
ஊட்டச்சத்து குறைபாடு அறிகுறிகள் இவைதான்.. உடனே உஷாராகுங்க!...
வசூலில் 'மாமன்' படத்தை முந்தியதா 'டிடி நெக்ஸ்ட் லெவல்'?
வசூலில் 'மாமன்' படத்தை முந்தியதா 'டிடி நெக்ஸ்ட் லெவல்'?...
போராடிய ஜெய்ஸ்வாஸ்.. முடித்துவிட்ட ப்ரார்.. பஞ்சாப் வெற்றி!
போராடிய ஜெய்ஸ்வாஸ்.. முடித்துவிட்ட ப்ரார்.. பஞ்சாப் வெற்றி!...
இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் AI Backdrop பயன்படுத்துவது எப்படி?
இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் AI Backdrop பயன்படுத்துவது எப்படி?...
திமுக எம்பி சி.என்.அண்ணாதுரைக்கு சன்சத் ரத்னா விருது..!
திமுக எம்பி சி.என்.அண்ணாதுரைக்கு சன்சத் ரத்னா விருது..!...
திடீரென நடன மேடையில் பாய்ந்த காளை - வைரல் வீடியோ!
திடீரென நடன மேடையில் பாய்ந்த காளை - வைரல் வீடியோ!...
பொல்லாதவன் படத்திற்காக சிக்ஸ்பேக்... தனுஷ் உடைத்த உண்மை
பொல்லாதவன் படத்திற்காக சிக்ஸ்பேக்... தனுஷ் உடைத்த உண்மை...
ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் கொண்டாட்டம்.. படக்குழு வெளியிட்ட போட்டோஸ்!
ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் கொண்டாட்டம்.. படக்குழு வெளியிட்ட போட்டோஸ்!...
பழத்தோலை சாப்பிட்டதும் தூக்கி எறியாதீங்க இப்படி பயன்படுத்தலாம்..!
பழத்தோலை சாப்பிட்டதும் தூக்கி எறியாதீங்க இப்படி பயன்படுத்தலாம்..!...
ஏசி ரூமில் இருந்து திடீரென வெயிலுக்கு போனால் ஆபத்து!
ஏசி ரூமில் இருந்து திடீரென வெயிலுக்கு போனால் ஆபத்து!...