Vijay Hazare Trophy: ரன் மெஷினாக திகழும் கோலி, ரோஹித்.. விஜய் ஹசாராவில் சதம் அடித்து கலக்கல்..!

Virat Kohli- Rohit Sharma Century: விராட் கோலி 101 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உதவியுடன் 131 ரன்கள் குவித்தார். டெல்லி அணிக்காக ஒரே ஒரு ரன் மட்டுமே எடுத்ததன் மூலம், விராட் கோலி லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 16,000 ரன்களை நிறைவு செய்துள்ளார். இந்த போட்டிக்கு முன்பு, விராட் கோலி 342 லிஸ்ட் ஏ போட்டிகளில் 15,999 ரன்களை எடுத்திருந்தார்.

Vijay Hazare Trophy: ரன் மெஷினாக திகழும் கோலி, ரோஹித்.. விஜய் ஹசாராவில் சதம் அடித்து கலக்கல்..!

விராட் கோலி - ரோஹித் சர்மா சதம்

Published: 

24 Dec 2025 16:57 PM

 IST

இந்தியா முழுவதும் உள்நாட்டு தொடரான விஜய் ஹசாரே டிராபி (Vijay Hazare Trophy) இன்று அதாவது 2025 டிசம்பர் 24ம் தேதி முதல் தொடங்கியது. முதல் நாளான இன்று சிக்கிம் vs மும்பை அணியும் (Mumbai), டெல்லி vs ஆந்திர பிரதேச அணிகள் மோதியது. மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிக்கிம் அணி கேப்டன் லீ யோங் லெப்சா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தேர்வு செய்தார். சிக்கிம் அணிக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை, இரண்டாவது ஓவர் வீசிய துஷார் தேஷ்பாண்டே அமித் ராஜேரா ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். பின்னர் சாத்விக் மற்றும் ஆஷிஷ் தாபா இரண்டாவது விக்கெட்டுக்கு அரைசதம் (51) இணைப்பாட்டை ஏற்படுத்தினர். தாபா 87 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து ஷர்துல் தாக்கூர் பந்தில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து, கிராந்தி 34 ரன்களும், ராபின் மன்குமார் லிம்பூ 31 ரன்களும் எடுத்தனர். இதன் காரணமாக சிக்கிம் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்தது. மும்பை கேப்டன் ஷர்துல் தாக்கூர் தனது ஆறு ஓவர்களில் 19 ரன்களை விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். துஷார் தேஷ்பாண்டே, தனுஷ் கோட்டியன், ஷம்ஸ் முலானி, முஷீர் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

ALSO READ: புதிய கேப்டனை மாற்றும் டெல்லி கேபிடல்ஸ்..? அக்சர் படேல் கேப்டன்ஷிக்கு ஆபத்தா?

ரோஹித் சர்மா அதிரடி:


234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் தொடக்க வீரர்களாக அங்கிரிஷ் ரகுவன்ஷி மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர். ரோஹித் சர்மா ஆட்டமிழந்தபோது, ​​மும்பை வெற்றியின் விளிம்பில் இருந்தது. ரோஹித் 94 பந்துகளில் 9 சிக்ஸர்கள் மற்றும் 18 பவுண்டரிகளுடன் 155 ரன்கள் எடுத்தார். இதனை தொடர்ந்து சகோதர்களான முஷிர் கான் (27) மற்றும் சர்பராஸ் கான் (8) ஆட்டமிழக்காமல் ரன்களை சேர்க்க, மும்பை அணி 30.3 ஓவர்களில் 237 ரன்கள் இலக்கை அடைந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மும்பை அணி அடுத்த போட்டியில் வருகின்ற 2026ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி வெள்ளிக்கிழமை உத்தரகண்ட் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்திலும் நடைபெறும்.

விராட் கோலி சதம்:


டெல்லி மற்றும் ஆந்திரா இடையேயான போட்டி பிசிசிஐயின் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆந்திர பிரதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது. 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, விராட் கோலி சதத்துடன் 37.4 ஓவர்களில் இலக்கை எட்டியது.

ALSO READ: 2026 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு மாறும் கேப்டன்சி.. சூர்யாக்கு பதிலாக புதிய கேப்டன் யார்?

இந்த போட்டியில் விராட் கோலி 101 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உதவியுடன் 131 ரன்கள் குவித்தார். டெல்லி அணிக்காக ஒரே ஒரு ரன் மட்டுமே எடுத்ததன் மூலம், விராட் கோலி லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 16,000 ரன்களை நிறைவு செய்துள்ளார். இந்த போட்டிக்கு முன்பு, விராட் கோலி 342 லிஸ்ட் ஏ போட்டிகளில் 15,999 ரன்களை எடுத்திருந்தார். சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு லிஸ்ட் ஏ போட்டிகளில் 16,000 ரன்களை எட்டிய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். லிஸ்ட் ஏ என்பது சர்வதேச 50 ஓவர் போட்டி மற்றும் உள்நாட்டு 50 ஓவர் போட்டிகளை கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

கடத்தியவரின் ஸ்மார்ட் வாட்சை பயன்படுத்தி தப்பித்த இளைஞர் - என்ன நடந்தது?
விமான நிலையங்களில் கைவிடப்பட்ட பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் இளைஞர்
11 மாத வாடகை ஒப்பந்தம் முடிந்தும் வீட்டை காலி செய்ய மறுக்கும் வாடகையாளர்
2026ல் இந்த ஆபத்துகள் பூமியில் ஏற்படலாம்.. அதிர்ச்சி தரும் பாபா வங்காவின் கணிப்புகள்..