Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vaibhav Suryavanshi : தொடர்ந்து சரியும் வைபவ் சூர்யவன்ஷி.. வைரல் வீரருக்கு என்ன ஆச்சு?

U19 Asia Cup : ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் போட்டியில் அசத்திய வைபவ் சூர்யவன்ஷி, தற்போது சையத் முஷ்டாக் அலி டிராபியில் ரன் எடுக்க திணறுகிறார். தொடர் தோல்விகள் பீகார் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. இவரது ஃபார்ம் U19 போட்டியில் சிக்கலை ஏற்படத்தலாம் என ரசிகர்கள் கவலை.

Vaibhav Suryavanshi : தொடர்ந்து சரியும் வைபவ் சூர்யவன்ஷி.. வைரல் வீரருக்கு என்ன ஆச்சு?
வைபவ் சூர்யவன்ஷி
C Murugadoss
C Murugadoss | Updated On: 01 Dec 2025 08:10 AM IST

இந்திய கிரிக்கெட்டின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் போட்டியில் அற்புதமாக விளையாடினார். தோஹாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணியின் முன்னணி ரன் குவிப்பாளராக இருந்தார், அபார சதம் அடித்தார். இருப்பினும், இந்தியா திரும்பியதிலிருந்து, ரன்கள் எடுக்க அவர் திணறி வருகிறார். அவர் தற்போது சையத் முஷ்டாக் அலி டிராபி 2025 இல் விளையாடி வருகிறார், அங்கு அவர் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறார். தொடர்ந்து ஆட்டங்களில் ஒரு இலக்க ரன் மட்டுமே எடுத்து வருகிறார்.

தொடர் சொதப்பல்

2025, நவம்பர் 30 ஆம் தேதி சையத் முஷ்டாக் அலி டிராபியில் நடைபெற்ற ஒரு போட்டியில், பீகார் ஜம்மு-காஷ்மீரிடம் தோற்றது. பீகார் 160 ரன்கள் என்ற இலக்கை அடையத் தவறிவிட்டது. நட்சத்திர பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி முற்றிலும் தோல்வியடைந்தார். அவர் 7 பந்துகளை மட்டுமே சந்தித்து 5 ரன்கள் மட்டுமே எடுத்து கிளீன் பவுல்டு ஆனார். இந்தப் போட்டியில் இது முதல் முறை அல்ல; அவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக தொடக்கத்திலேயே ஆட்டமிழந்தார்.

Also Read : சச்சின் சாதனையை முறியடித்து விராட் கோலி புதிய உலக சாதனை – கொண்டாடும் ரசிகர்கள்

முன்னதாக, மத்தியப் பிரதேசத்திற்கு எதிரான போட்டியில், வைபவ் சூர்யவன்ஷி வெறும் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சண்டிகருக்கு எதிரான போட்டியிலும் இதேபோன்ற சொதப்பல்தான். அங்கு அவர் வெறும் 14 ரன்களை மட்டுமே எடுத்தார். அதாவது அவர் தனது கடைசி மூன்று இன்னிங்ஸ்களில் 20 ரன்களை எட்டவில்லை. இது பீகாரையும் பாதித்துள்ளது. இந்த போட்டியில் அவர்கள் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை, தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியடைந்துள்ளனர். எலைட் குரூப் பி-யில் இதுவரை வெற்றி பெறாத ஒரே அணி பீகார் மட்டுமே.

 19 வயதுக்குட்பட்டோர் அணியின் பதற்றம்

வைபவ் சூரியவன்ஷியின் மோசமான ஃபார்ம் இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணி டிசம்பர் 12 ஆம் தேதி தொடங்கி துபாயில் நடைபெறும் 19 வயதுக்குட்பட்டோர் ஆசிய கோப்பை போட்டியில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் வைபவ் சூரியவன்ஷி சேர்க்கப்பட்டுள்ளார்.

Also Read : கிரிக்கெட் முதல் கபடி வரை.. 2025ல் சாம்பியன் பட்டத்தை தூக்கிய இந்திய மகளிர் அணிகள்!

வைபவ் சூரியவன்ஷி விரைவில் ஃபார்முக்கு திரும்பவில்லை என்றால், இந்திய அணியின் சிரமங்கள் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டி, டிசம்பர் 12 முதல் டிசம்பர் 21 வரை துபாயில் நடைபெற உள்ளது. இன்னும் 10 நாட்கள் இருக்கும் நிலையில் அதற்குள் வைபவ் தன்னுடைய பழைய பார்முக்கு திரும்ப வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.