T20 World Cup Semi-Finals: டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி போட்டிகள் எப்போது தொடக்கம்? இந்திய அணியின் போட்டி விவரம் இதோ!
T20 World Cup 2026 Semi-Finals Match Dates: தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து இடையிலான முதல் அரையிறுதி போட்டி வருகின்ற 2026 மார்ச் 4ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இங்குதான், இந்திய அணி, பலமிக்க வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்தியா - இங்கிலாந்து
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 (2026 T20 World Cup) கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. மொத்தமாக பங்கேற்ற 20 அணிகளில் தற்போது 4 அணிகள் மட்டுமே அரையிறுதி போட்டிக்கு எட்டியுள்ளன. அதன்படி இந்தியா (Indian Cricket Team), இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதியில் மோதி இறுதிப்போட்டிக்கு முன்னேற முயற்சிக்கும். இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகள் வருகின்ற 2026 மார்ச் 8ம் தேதி நேருக்கு நேர் மோதி சாம்பியன் பட்டத்தை தூக்க முயற்சிக்கும். அந்தவகையில், 2026 டி20 உலகக் கோப்பைக்கான முதல் அரையிறுதி மற்றும் 2வது அரையிறுதி எப்போது, எங்கு நடைபெறுகிறது உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: ஐபிஎல் 2026க்கு பிறகு! ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடும் இந்தியா.. பிசிசிஐ அட்டவணை வெளியீடு!
டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகள்:
𝗧𝗵𝗲 𝘁𝗶𝘁𝗹𝗲 𝗱𝗲𝗳𝗲𝗻𝗰𝗲 𝗰𝗼𝗻𝘁𝗶𝗻𝘂𝗲𝘀 🇮🇳#TeamIndia are semi-finals bound in the #T20WorldCup 👏
Updates ▶️ https://t.co/ur4pr8Bi3K#MenInBlue | #INDvWI pic.twitter.com/45sjJydel9
— BCCI (@BCCI) March 1, 2026
- டி20 உலகக் கோப்பை அரையிறுதி 1 : தென்னாப்பிரிக்கா vs நியூசிலாந்து
- டி20 உலகக் கோப்பை அரையிறுதி 2 : இந்தியா vs இங்கிலாந்து
தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து இடையிலான முதல் அரையிறுதி போட்டி வருகின்ற 2026 மார்ச் 4ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இங்குதான், இந்திய அணி, பலமிக்க வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 2வது அரையிறுஹி போட்டியானது வருகின்ற 2026 மார்ச் 5ம் தேதி மும்பையில் உள்ள புகழ்பெற்ற வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி தேதிகள்:
- டி20 உலகக் கோப்பை அரையிறுதி 1: தென்னாப்பிரிக்கா vs நியூசிலாந்து – மார்ச் 4, 2026
- டி20 உலகக் கோப்பை அரையிறுதி 2: இந்தியா vs இங்கிலாந்து – மார்ச் 5, 2026
இந்த 2 அரையிறுதி போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும். போட்டியின் டாஸ் அரை மணிநேரத்திற்கு முன்னதாக அதாவது மாலை 6.30 மணிக்கு நடைபெறும்.
ALSO READ: அதே ஸ்கோர்.. 10 ஆண்டுகால வலி.. இந்தியா – மேற்கிந்திய தீவுகள் போட்டியில் இப்படி ஒரு விஷயமா?
போட்டியை எங்கு காண்பது..?
ஐசிசி டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகளை ஆன்லைனில் பார்க்கலாம். ஜியோஹாட்ஸ்டார் அந்தந்த தேதிகளில் இந்தியா vs இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா vs நியூசிலாந்து போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். தொலைக்காட்சியில் பார்க்க விருப்பம் கொண்டவர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சி சேனல்கள் போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம்.