IND vs NZ Final: டி20 உலகக் கோப்பை 2026 பைனலுக்கான டிக்கெட்டின் விலை எவ்வளவு? முன்பதிவு செய்வது எப்படி?

T20 World Cup 2026 Final Ticket: அகமதாபாத்தின் மோடேரா பகுதியில் அமைந்துள்ள இந்த மைதானம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாகும். மேலும், சுமார் 1.3 லட்சம் பார்வையாளர்கள் அமரக்கூடிய திறன் கொண்டது. எனவே டிஜிட்டல் டிக்கெட்டுகளை முன்கூட்டியே பதிவிறக்கம் செய்து ஆஃப்லைனில் எடுத்து வைத்து கொள்வது முக்கியம்.

IND vs NZ Final: டி20 உலகக் கோப்பை 2026 பைனலுக்கான டிக்கெட்டின் விலை எவ்வளவு? முன்பதிவு செய்வது எப்படி?

இந்தியா - நியூசிலாந்து

Published: 

06 Mar 2026 17:02 PM

 IST

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 (2026 T20 World Cup) தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று அதாவது 2026 மார்ச் 5ம் தேதி பரபரப்பாக நடந்த 2வது அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்திய பிறகு, இந்தியா தொடர்ந்து 2வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி (Indian Cricket Team) இப்போது இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும். இந்தப் போட்டியானது வருகின்ற 2026 மார்ச் 8ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும். இதன் விளைவாக, இறுதி போட்டிக்கான டிக்கெட் முன்பதிவு குறித்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தெரிந்துகொள்ள விரும்புகின்றனர். அந்தவகையில், 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விலை, எப்படி முன்பதிவு செய்வது உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: அகமதாபாத் இந்திய அணிக்கு ராசியானதா? புள்ளி விவரங்கள் கூறுவது என்ன?

டிக்கெட்டுகளை எப்படி முன்பதிவு செய்வது..?

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் BookMyShow மற்றும் ICC போர்டல் மூலம் அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்யப்படுகின்றன. அதிக தேவை காரணமாக, பெரும்பாலான டிக்கெட் பிரிவுகள் தற்போது விற்றுத் தீர்ந்துவிட்டன. இருப்பினும், கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது.

பொதுவாக, சில டிக்கெட்டுகள் முக்கிய போட்டிகளுக்கு 24 முதல் 48 மணி நேரத்திற்கு முன்பு மீண்டும் வெளியிடப்படும். மும்பையில் நடந்த அரையிறுதிப் போட்டியின் போதும் இதுவே நடந்தது. எனவே, டிக்கெட்டுகள் கிடைக்காத ரசிகர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது ஆப்களை தொடர்ந்து பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

டிக்கெட் விலை என்ன?

மேல் ஸ்டாண்டுகளுக்கான டிக்கெட் விலைகள் சுமார் ரூ. 3,000ல் தொடங்குகின்றன, அதே நேரத்தில், பிரீமியம் மற்றும் கிளப் லவுஞ்ச் இருக்கைகள் ரூ. 50,000 முதல் ரூ. 75,000 வரை விற்கப்பட்டு வருகிறது.

பலத்த விதிகள்:

2026 டி20 உலகக் கோப்பை இந்தியா – நியூசிலாந்து இடையிலான இறுதிப் போட்டிக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போட்டி மாலை 7 மணிக்குத் தொடங்கும் நிலையில், மைதான வாயில்கள் மாலை 4 மணிக்குத் திறக்கப்படும். பாதுகாப்பு சோதனைகளில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க, பார்வையாளர்கள் குறைந்தது 3 மணி நேரத்திற்கு முன்பே வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பவர் பேங்க்கள், பைகள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் குடைகள் போன்ற பல பொருட்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படாது. ரசிகர்கள் தங்கள் மொபைல் போன்கள் மற்றும் மணி பர்ஸ்கள் மட்டுமே உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

போட்டி பார்வையாளர்களுக்கு முக்கியமான தகவல்

அகமதாபாத்தின் மோடேரா பகுதியில் அமைந்துள்ள இந்த மைதானம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாகும். மேலும், சுமார் 1.3 லட்சம் பார்வையாளர்கள் அமரக்கூடிய திறன் கொண்டது. எனவே டிஜிட்டல் டிக்கெட்டுகளை முன்கூட்டியே பதிவிறக்கம் செய்து ஆஃப்லைனில் எடுத்து வைத்து கொள்வது முக்கியம். ஏனெனில், ஒரே இடத்தில் அதிக பார்வையாளர்கள் கூடுவார்கள் என்பதால் நெட்வொர்க் பிஸியாக இருக்கலாம்.

ALSO READ: ஐசிசி இறுதிப் போட்டிகளில் இந்தியா- நியூசிலாந்து எத்தனை முறை மோதியுள்ளன? யார் அதிக முறை ஆதிக்கம்?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி சாதாரண போட்டியை விட அதிக எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது. எனவே, கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு பெரிய கொண்டாட்டமாக இருக்கும். எனவே, போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் ரசிகர்கள் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு மற்றும் நுழைவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

Follow Us
வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்பாடுகளில் அதிரடி மாற்றம்.. இந்தியாவில் அமலுக்கு வந்தது..
துபாய், தோஹா, பஹ்ரைனில் ஈரான் தொடர் ஏவுகணைத் தாக்குதல்.. அமெரிக்கத் தளங்கள் இலக்கு!
ஐதராபாத் - ஈரான்.. பல நூற்றாண்டுகளைக் கடந்த கலாச்சார பந்தம்..
ஒவ்வொரு லைக்கிற்கும் ஒருமுறை ஸ்கிப்பிங் செய்வேன்... 1.8 மில்லியன் லைக்குகளை பெற்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி