IND vs PAK: இன்று மீண்டும் ஒரு இந்தியா – பாகிஸ்தான் போட்டி… கை குலுக்க தடையா..?
Sultan Of Johor Cup 2025: 2025 சுல்தான் ஆஃப் ஜோகூர் கோப்பையில் மொத்தம் ஆறு அணிகள் விளையாடுகின்றன. இந்தியா தற்போது இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஒரு வெற்றி மற்றும் ஒரு டிராவில் இருந்து நான்கு புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

2025ம் ஆண்டுக்கான சுல்தான் ஜோகூர் கோப்பை (Sultan Of Johor Cup 2025) கடந்த 2025 அக்டோபர் 11ம் தேதி தொடங்கியது. இதில், இந்திய அணி இதுவரை நடந்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 2025 அக்டோபர் 14ம் தேதியான இன்று நடைபெற உள்ள இந்தியா vs பாகிஸ்தான் போட்டி ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியுள்ளது. பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு அதன் தேசிய ஹாக்கி அணி வீரர்கள் இந்திய வீரர்களை சந்திப்பதை தடை செய்துள்ளது. முன்னதாக, ” ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையைத் தொடர்ந்து, 2025 ஆசிய கோப்பை (Asia Cup) மற்றும் 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போன்ற கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுரன் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கைகுலுக்க மறுத்துவிட்டனர். இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் போட்டியை நடத்திய ஏசிசி மற்றும் ஐசிசியிடம் புகார் அளித்துள்ளது.
ALSO READ: என் அனுமதி இல்லாமல்.. நக்வி பிடிவாதம்! இந்திய அணிக்கு கோப்பை தர மறுப்பு!




தயார் நிலையில் பாகிஸ்தான்:
2025 அக்டோபர் 14ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் இந்திய ஜூனியர் ஹாக்கி அணியினர் கைகுலுக்காமல் இதேபோல் செயல்படக்கூடும். இதையடுத்து, பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ”இந்திய அணியின் கைகுலுக்க மறுப்புக்கு பாகிஸ்தான் வீரர்கள் ஏற்கனவே தயாராக உள்ளனர். கைகுலுக்க வேண்டாம் என்ற எந்தவொரு உத்தரவையும் புறக்கணிக்குமாறு பாகிஸ்தான் வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் வீரர்கள் எந்த சைகைகளையும் செய்வதற்கோ அல்லது அவர்களுடன் ஈடுபடுவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது.” என்ற தெரிவித்தார்.
இந்திய அணி தனது முதல் போட்டியில் கிரேட் பிரிட்டனை 3-2 என்ற கணக்கில் தோற்கடித்தது. பின்னர் 2வது போட்டியில் நியூசிலாந்தை 4-2 என்ற கணக்கில் வென்றது. மறுபுறம், பாகிஸ்தான் தனது முதல் போட்டியில் மலேசியாவை 7-2 என்ற கணக்கில் தோற்கடித்தது. இரண்டாவது போட்டியில் கிரேட் பிரிட்டனிடம் 5-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
ALSO READ: அரையிறுதி வாய்ப்பு இந்திய அணிக்கு தவறியதா..? சமன்பாடு என்ன சொல்கிறது..?
புள்ளிப் பட்டியலில் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் நிலை:
A winning performance in Johor! 🇮🇳💪
Team India defeat New Zealand 4–2 to make it two in two at the Sultan of Johor Cup 2025. 🔥#HockeyIndia #IndiaKaGame pic.twitter.com/7PF5MIi4ln
— Hockey India (@TheHockeyIndia) October 12, 2025
2025 சுல்தான் ஆஃப் ஜோகூர் கோப்பையில் மொத்தம் ஆறு அணிகள் விளையாடுகின்றன. இந்தியா தற்போது இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஒரு வெற்றி மற்றும் ஒரு டிராவில் இருந்து நான்கு புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தில் உள்ளது. கிரேட் பிரிட்டன் மற்றும் பாகிஸ்தான் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன. போட்டியை நடத்தும் மலேசியா இன்னும் ஒரு வெற்றியை கூட பெறவில்லை. நியூசிலாந்து தனது 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து தற்போது கடைசி இடத்தில் உள்ளது.