Rohit Sharma: அன்றைய நாளில் ஓய்வு முடிவை யோசித்தேன்.. பகீர் கிளப்பிய ரோஹித் சர்மா! விரைவில் ஓய்வா?
2023 World Cup final: முன்னாள் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தற்போது டி20 சர்வதேச மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இன்னும் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா விளையாடி வருகிறார்.

ரோஹித் சர்மா
இந்திய கிரிக்கெட்டின் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான ரோஹித் சர்மா, தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்தும், தனது ஓய்வு குறித்தும் பேசியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு இந்திய அணியிடம் (Indian Cricket Team) ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. அப்போது, ரோஹித் சர்மா (Rohit Sharma) தனது கிரிக்கெட் வாழ்க்கையை விட்டு வெளியேற யோசித்ததாக முதல் முறையாக வெளிப்படையாக தெரிவித்தார். இது மட்டுமின்றி, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அந்த தோல்வி தன்னை உள்ளிருந்து முற்றிலுமாக உடைத்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
2023 உலகக் கோப்பை பைனல் குறித்து மனம் திறந்த ரோஹித்:
குருகிராமில் உள்ள மாஸ்டர்ஸ் யூனியனில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரோஹித் சர்மா, ”2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தபிறகு, கிரிக்கெட் என்னிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துவிட்டதாக உணர்ந்தேன். நான் இனி விளையாட்டை விளையாட விருப்பம் இல்லாமல் இருந்தேன். அந்த நேரத்தில் என்னிடம் எந்த சக்தியும் இல்லை. உலகக் கோப்பையின்போது நான் வெறுமனே 2 அல்லது 3 மாதங்கள் மட்டுமல்ல, 2022ம் ஆண்டு நான் கேப்டனாக ஆனதிலிருந்து 2023 உலகக் கோப்பைக்காக என்னை அர்ப்பணித்துக் கொண்டேன். வெற்றி என்னும் இலக்கை அடைய முடியாதபோது, நான் உள்பட அனைவரும் மிகவும் ஏமாற்றமடைந்தனர்.
ALSO READ: 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணியை மாற்றலாமா? ஐசிசி கூறுவது என்ன?
என்ன நடந்தது என்பதை எங்களால் நம்பவே முடியவில்லை. தனிப்பட்ட முறையில் அது எனக்கு மிகவும் கடினமான நேரம். இந்த இழப்பிலிருந்து மீள எனக்கு பல மாதங்கள் ஆனது. கிரிக்கெட் தான் தனது மிகப்பெரிய காதல். அதன்பிறகு, அதை அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்க முடியாது என்று தன்னைத்தானே நினைவுபடுத்திக் கொண்டேன்” என்றார்.
ஒரு புதிய தொடக்கம்:
“After the loss in Ahmedabad I honestly felt like I didn’t want to play this Cricket anymore”
Rohit Sharma spoke about what happened after the loss in the 2023 World Cup final in Ahmedabad.🗣️-
“Everybody was extremely disappointed, and we just couldn’t believe what had… pic.twitter.com/wpKUjYvMYl
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) December 21, 2025
தொடர்ந்து பேசிய அவர், “இது எனக்கு ஒரு பெரிய பாடமாக இருந்தது. ஏமாற்றத்தை எவ்வாறு சமாளிப்பது, உங்களை எவ்வாறு மீட்டமைப்பது, எப்படி முன்னேறுவது என்று யோசித்தேன். 2023 ஏமாற்றத்திற்கு கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, எனது தலைமையிலான இந்திய அணி 2024 டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றி நிச்சயமாக பழைய காயங்களை ஆற்றியது. இப்போது திரும்பிப் பார்த்து இதையெல்லாம் சொல்வது எளிதாகத் தெரிகிறது என்று ஒப்புக்கொண்டாலும், 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி தோற்ற நிலைமை மிகவும் கடினமாக இருந்தது. அந்த ஏமாற்றத்தை சமாளிப்பது எளிதல்ல. இதன் காரணமாக, 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடி எனது வாழ்க்கையை சிறப்பாக முடிப்பதே குறிக்கோள்.” என்று தெரிவித்தார்.
ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடும் ரோஹித்:
முன்னாள் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தற்போது டி20 சர்வதேச மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இன்னும் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா விளையாடி வருகிறார்.
ALSO READ: இப்படி கலாய்ச்சுட்டாரே.. இங்கிலாந்தை மேடையில் கிண்டலடித்த ரோஹித்.. சிரிப்பலையில் அதிர்ந்த அரங்கம்!
ரோஹித் சர்மா தலைமையின் கீழ், 2023 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தொடர்ச்சியாக 9 போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அகமதாபாத்தில் நடந்த இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான இறுதிப் போட்டியில் டிராவிஸ் ஹெட்டின் சதம் அடித்து இந்திய அணி சாம்பியன் பட்டம் ஆகும் கனவை தட்டி பறித்தார்.