Rohit Sharma: மீண்டும் டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா.. விளையாட ஆர்வம் காட்டும் ஹிட் மேன்!
Syed Mushtaq Ali: சையத் முஷ்டாக் அலி டிராபி 2025ம் ஆண்டு, மும்பை அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று எலைட் குரூப் ஏ-வில் இடம் பெற்றுள்ளது. மும்பை அணி தற்போது ஷர்துல் தாக்கூர் தலைமையில் விளையாடி வருகிறது.

ரோஹித் சர்மா
இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடும் முன்னாள் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா உள்நாட்டு போட்டிகளில் விளையாடி வருகிறார். அதன்படி, ரோஹித் சர்மா (Rohit Sharma) லிஸ்ட் ஏ கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல, டி20 கிரிக்கெட்டிற்கும் திரும்ப ஆர்வமாக உள்ளார். ஒரு ஊடக அறிக்கையின்படி, ரோஹித் சர்மா 2025ல் சையத் முஷ்டாக் அலி டிராபியின் நாக் அவுட் கட்டத்தில் விளையாட விரும்புகிறார். ரோஹித் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட அறிக்கையின்படி, சையத் முஷ்டாக் அலி டிராபி (Syed Mushtaq Ali Trophy) டி20 போட்டியில் விளையாட விரும்புவதாக ரோஹித் சர்மா மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் தெரிவித்துள்ளார்.
ALSO READ: ஐபிஎல்லில் இந்த 5 வெளிநாட்டு வீரர்கள்.. சில போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்கள்..!
சையத் முஷ்டாக் அலி டிராபி:
Rohit Sharma interested to play for Mumbai in Syed Mushtaq Ali Trophy (SMAT) Knockouts.
Knockouts – 12 to 18 December. pic.twitter.com/JwBFgXtFqy
— rohit and virat roko (@OverAndOut1507) December 4, 2025
இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர் முடிந்த பிறகு, இந்திய உள்நாட்டு டி20 போட்டியான சையத் முஷ்டாக் அலி டிராபியின் நாக் அவுட் கட்டத்தில் விளையாட ரோஹித் சர்மா தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில், 50 ஓவர் வடிவத்தில் நடைபெறும் விஜய் ஹசாரே டிராபியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடுவது குறித்து விவாதம் எழுந்துள்ளது. 2025 விஜய் ஹசாரே டிராபியில் விளையாட விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சையத் முஷ்டாக் அலி டிராபியில் விராட் கோலி பங்கேற்பது குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால் விஜய் ஹசாரே டிராபி தொடங்குவதற்கு முன்பு ரோஹித் சர்மா சையத் முஷ்டாக் அலி டிராபியில் விளையாடவுள்ளனர். இந்த முடிவு இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஏனெனில் ரோஹித் சர்மா கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக டி20 சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
ALSO READ: விஜய் ஹசாரே டிராபியில் விளையாடும் விராட் கோலி.. ஒருநாள் சம்பளம் இவ்வளவா?
சையத் முஷ்டாக் அலி டிராபி 2025ம் ஆண்டு, மும்பை அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று எலைட் குரூப் ஏ-வில் இடம் பெற்றுள்ளது. மும்பை அணி தற்போது ஷர்துல் தாக்கூர் தலைமையில் விளையாடி வருகிறது. தற்போது ட்ரேடு மூலம் ஷர்துல் தாக்கூர் ஐபிஎல் 2026ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மாவுடன் விளையாடுவார். சையத் முஷ்டாக் அலி டிராபிக்கான மும்பை அணியில் அஜிங்க்யா ரஹானே, சர்பராஸ் கான் மற்றும் ஆயுஷ் மத்ரே போன்ற முக்கிய வீரர்கள் உள்ளனர். அதேநேரத்தில், இந்திய டி20 அணியின் சூர்யகுமார் யாதவ் மும்பை அணிக்காகவும் விளையாடியுள்ளார்.