Ravichandran Ashwin Documentary: சிஎஸ்கே வெளியிடும் அஸ்வினின் ஆவணப்படம்! காதல் கதையை பகிர்ந்த அஸ்வினின் மனைவி!

Ashwin Cricket Documentary Trailer: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் ஆவணப்படத்தின் ட்ரெய்லர், அவரது குடும்பத்தினர் மற்றும் கிரிக்கெட் வாழ்க்கை குறித்த அரிய காட்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அஸ்வினின் மனைவி, பெற்றோர் ஆகியோர் அவரது கிரிக்கெட் பயணம் குறித்துப் பேசியுள்ளனர். இந்த ட்ரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது. முழு ஆவணப்படம் ஜூன் 19, 2025 அன்று வெளியாகவுள்ளது.

Ravichandran Ashwin Documentary: சிஎஸ்கே வெளியிடும் அஸ்வினின் ஆவணப்படம்! காதல் கதையை பகிர்ந்த அஸ்வினின் மனைவி!

ரவிச்சந்திரன் அஸ்வின்

Published: 

18 Jun 2025 20:01 PM

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) குறித்ததாக ஆவணப்படம் ஒன்று நாளை அதாவது 2025 ஜூன் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இது தொடர்பான ட்ரெய்லரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், அஸ்வின் பந்துவீசுவது போன்றும், பேட்டிங் செய்வதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றது. தொடர்ந்து, அஸ்வினின் மனைவி பிரீத்தி நாராயணன் (Preethi Narayanan) பேட்டியுடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. அதன்பிறகு, அஸ்வினின் தந்தை மற்றும் தாயாரும் அவரது கிரிக்கெட் வாழ்க்கையை பற்றி பேசினர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரவிச்சந்திரன் அஸ்வின் ஆவணப்படம்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரவிச்சந்திரன் அஸ்வினின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாக வெளியிட இருக்கிறது. இதன் முழு வீடியோ நாளை அதாவது 2025 ஜூன் 19ம் தேதி வெளியாகிறது. இதுதொடர்பான சிறிய வீடியோ ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பகிர்ந்தது. அப்போது, அதில் பேசிய அஸ்வினின் மனைவி ப்ரீத்தி தங்களது காதல் கதையைப் பற்றி கூறினார். அதில், இருவரும் பள்ளி நாட்களில் இருந்தே நண்பர்கள், அது எப்படி தொடங்கியது? என்று பேசினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீடியோ வெளியீடு:

தொடர்ந்து, அஸ்வினின் தந்தை ஆவணப்படத்தில், “நம் மகனுக்கு என்ன ஆச்சுன்னு பாருங்க, எனக்குப் புரியல. அவன் காலில் எந்த அசைவும் இல்லை. அவனால் சரியாக நடக்கக்கூட முடியவில்லை, இந்த நேரத்தில் என் மகனின் கிரிக்கெட் வீரர் கனவு தகர்ந்துவிடும் என்று நினைத்தேன். அப்போதுதான், அஸ்வினின் அம்மா, வேகப்பந்து வீச்சாளராக இருந்து சுழற்பந்து வீச்சாளராக மாற வேண்டும் என்று அஸ்வினை வற்புறுத்தினார். இதன்மூலம், அஸ்வின் தனது குடும்பத்திற்கு மட்டுமல்ல, தனது நாட்டிற்கும் பெருமை சேர்த்தார்.” என்று தெரிவித்தார்.

ரவிச்சந்திரன் அஸ்வினின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:

கடந்த 2024 டிசம்பர் 18ம் தேதி ரவிச்சந்திரன் அஸ்வின், அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணிக்காக இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளையும், 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்டுகளையும், 65 டி20 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அஸ்வின் டிசம்பர் 8 அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது கடைசி சர்வதேச போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories
2026 Women’s T20 World Cup: இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுவது உறுதி! 2026 மகளிர் உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியீடு..!
India vs England Test Series 2025: இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி செய்யப்போகும் சம்பவம்.. இந்திய வீரர்கள் படைக்கவுள்ள சாதனைகள்!
India’s England Tour 2025: இங்கிலாந்து மண்ணில் இந்தியாவின் சாதனை எப்படி..? தொடர் வெற்றிக்காக 18 ஆண்டுகள் காத்திருப்பு!
India vs England Test Series 2025: இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அறிமுகமாகும் புதிய டிராபி.. என்ன தெரியுமா?
India vs England Test Series 2025: இங்கிலாந்து மண்ணில் இதுவரை 3 தொடர் வெற்றியே! கடைசியாக இந்திய அணி வெற்றிபெற்றது எப்போது?
Jasprit Bumrah: பணிச்சுமை, காயம்.. கேப்டன் பதவியை ஏன் வேண்டாம் என்றேன்..? பும்ரா விளக்கம்!